தேவையானவை:
உளுந்து மாவு – 4 கப்
பச்சரிசி மாவு – ஒரு கப்
தண்ணீர் – இரண்டரை கப்
கருப்பட்டி – ஒரு கப்
நல்லெண்ணெய் – கால் கப்
செய்முறை:
பச்சரிசி மாவு மற்றும் உளுத்தம் மாவை வெறும் வாணலியில் லேசாக வறுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இரண்டரை கப் தண்ணீரை லேசாக சூடுப்படுத்தி, அதில் பொடித்த கருப்பட்டி சேர்த்துக் கரையவிட்டு வடிகட்டிக்கொள்ளவும்.
அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் வடிகட்டிய கருப்பட்டித் தண்ணீரைச் சேர்க்கவும். பிறகு, வறுத்த மாவினைச் சேர்த்து கெட்டிபடாமல் கிளறவும். இடையிடையே நல்லெண்ணெய் சேர்த்து மாவை கையில் ஒட்டாத பதத்துக்கு கிளறி, களி பதத்துக்கு வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கவும். பிறகு, நல்லெண்ணெய் சேர்த்து சிறிய உருண்டைகளாக உருட்டி பரிமாறவும்.