சுடுநீரில் கிராம்பு சேர்த்து குடிப்பதால் உடலுக்கும் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று கீழே விரிவாக பார்க்கலாம்.
சுடுநீரில் கிராம்பு சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
நம்மில் பலபேர் சோர்வுத் தன்மை நீங்கி சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி டீயை குடிப்போம்.
ஆனால் அடிக்கடி டீ குடிப்பதும் நமக்கு ஆபத்து தான், எனவே உடலுக்கு ஆரோக்கியமான கிராம்பு கலந்த மூலிகை டீயை பருகலாம்.
ஐந்து கிராம்பை ஒரு கப் தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து, பின் அந்த நீரை பருகலாம்.
இந்த டீயில் விட்டமின் சத்துக்கள் ஏராளமாக நிறைந்துக் காணப்படுகிறது.
நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் காலையில் 1 கப் கிராம்பு டீ செய்வது குடிப்பதால் கிடைக்கும். இதனுடன் சிறிது எலுமிச்சை சாறும் சேர்த்து கொள்வது நல்லது.
தலைவலி, உயர் ரத்த அழுத்தம், செரிமானப் பிரச்சனை, கல்லீரல் குறைபாடு போன்ற பிரச்சனைகளைத் தடுத்து, பற்கள் பிரச்சனை, சீரான ரத்த ஓட்டம், இதயம் போன்றவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
பல் வலி இருப்பவர்கள் இந்த கிராம்பு கலந்த மூலிகை டீயை மிதமான சூட்டில் குடிப்பது மிகவும் நல்லது!