nTAbv6m
​பொதுவானவை

கண்டந்திப்பிலி ரசம்

என்னென்ன தேவை?

புளி தண்ணீர் – 2 கப்,
தக்காளி – 1,
துவரம்பருப்பு – 1 கப் (வேகவைத்தது),
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
கொத்தமல்லி இலை – சிறிது.

வறுத்து அரைக்க…

கண்டந்திப்பிலி – 5 துண்டு,
சிவப்பு மிளகாய் – 2,
மிளகு – 1/2 டீஸ்பூன்,
பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்,
தேங்காய்த் துருவல் – 1/2 டீஸ்பூன்.

தாளிக்க…

நெய் – 1/2 டீஸ்பூன்,
கடுகு – 1/2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

புளி தண்ணீர், தக்காளி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். கண்டந்திப்பிலி, மிளகு, சிவப்பு மிளகாய், பெருங்காயம் மற்றும் தேங்காய்த் துருவலை நெய்யில் வறுத்து அரைத்து கொள்ளவும். புளி வாசனை போன பின் அரைத்த மசாலா மற்றும் வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்து நுரை வந்தவுடன் இறக்கவும். பின்பு நெய்யில் கடுகு தாளித்து ரசத்தில் கொட்டவும். மேலே கொத்தமல்லி இலை சேர்க்கவும்.nTAbv6m

Related posts

பூண்டு பொடி

nathan

காதல் திருமணத்தை பெற்றோர் எதிர்க்க காரணம்

nathan

குழந்தைகளுக்கு பாலியல் கொடுமை பற்றி பெற்றோர் சொல்லித்தர வேண்டியவை

nathan

முட்டை நூடுல்ஸ் / Egg Noodles tamil

nathan

கோபமாக இருக்கும் கணவரை சமாதானப்படுத்துவதற்கான வழிகள்

nathan

வெங்காய ரசம்

nathan

ஒரிஜினல் சீன முட்டை ரோல்ஸ் / சைனீஸ் எக் ரோல்ஸ்

nathan

நண்டு ரசம்

nathan

க‌ணவரை முந்தானையில் முடிந்து கொள்ள‍ பெண்களுக்கு ஆலோசனைகள்

nathan