36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
​பொதுவானவை

சூப்பரான கருணைக்கிழங்கு சில்லி ப்ரை..!!

கருணைகிழங்கில் வைட்டமின் பி, வைட்டமின் சி, மாங்கனீஸ், மினரல்ஸ், ரிபோபிளேவின், பொட்டாசியம், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துக் காணப்படுகிறது. கருணைக்கிழங்கை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இப்போது கருணைக்கிழங்கை பயன்படுத்தி சுவையான கருணைக்கிழங்கு வறுவல் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :

கருணைக்கிழங்கு – 1 கிலோ
மிளகாய்த் தூள் – 4 ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
சோம்பு தூள் – 1 ஸ்பூன்
பு+ண்டு விழுது – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சைச்சாறு – 3 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

கருணைக்கிழங்கு வறுவல் செய்வதற்கு முதலில் கருணைக்கிழங்கின் மேல் தோலை சீவிவிட்டு, சதுரமான துண்டுகளாக நறுக்கி, சிறிதளவு உப்பு சேர்த்து அரை பதத்திற்கு வேகவைத்து அதில் உள்ள நீரை வடித்துவிட்டு தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், சோம்பு தூள், பூண்டு விழுது, சிறிதளவு உப்பு, எலுமிச்சைச்சாறு ஆகியவற்றை சேர்த்து, அதனுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக பிசைந்து கொள்ளவும்.

பின்னர் பிசைந்து வைத்துள்ள மசாலாவில் வேகவைத்த கருணைக்கிழங்கை சேர்த்து பிரட்டி 20 நிமிடம் ஊறவிடவும்.

அடுத்து தோசைக்கல்லை சூடாக்கி ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் கருணைக்கிழங்கை சுற்றி அடுக்கி, ஒரு புறம் வெந்ததும் திருப்பி போட்டு, மேலும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி மற்றொரு புறமும் வேக வைத்து எடுத்தால் சுவையான கருணைக்கிழங்கு வறுவல் தயார்.

Related posts

நீர் தோசை

nathan

வெங்காய ரசம்

nathan

காதல் வலையில் விழாமல் தப்பிக்க

nathan

கேரளா இறால் கறி,TMIL SAMAYAL

nathan

வெந்தயக் கீரை ரசம்

nathan

காரசாரமாக பாசிப் பருப்பு குருமா

nathan

நீங்கள் ரசத்தை விரும்பாதவரா? அப்ப இதை படிங்க….

nathan

ஹோலி பண்டிகை என்றால் என்ன, அது ஏன் கொண்டாடப்படுகிறது?

nathan

சூப்பரான கல்யாண வீட்டு சாம்பார் ரகசியம் இதுதான்!

nathan