24 1437740431 2broccoliandcabbage
ஆரோக்கிய உணவு

தைராய்டு உள்ளவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்!!!

கழுத்திற்கு நடுவில் உள்ள ஓர் சுரப்பி தான் தைராய்டு. இந்த சுரப்பி சுரக்கும் ஓர் ஹர்மோன் தான் தைராக்ஸின். இது தான் உடலின் வெப்பநிலை, உடல் எடை, மெட்டபாலிசம் போன்றவற்றை சீராக பராமரிக்கவும், உடலுக்கு வேண்டிய ஆற்றலை உற்பத்தி செய்யவும் உதவுகிறது. சொல்லப்போனால், உடலின் செயல்பாடுகள் சீராக நடைபெறுவதற்கு இந்த ஹார்மோன் மிகவும் இன்றியமையாதது எனலாம்.

ஆனால் சிலருக்கு இந்த ஹார்மோன் அதிகமாகவும் (ஹைப்பர் தைராய்டு), சிலருக்கு குறைவாகவும் (ஹைப்போ தைராய்டு) சுரக்கப்படும். இப்போது நாம் பார்க்கப்போவது, தைராய்டு சுரப்பி தைராக்ஸின் ஹார்மோனை உடலுக்கு வேண்டிய அளவில் சுரக்காமல், குறைவாக சுரந்தால் தவிர்க்க வேண்டிய உணவுகளைப் பற்றி தான்.

பொதுவாக இந்த நிலையால் பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். அதில் கர்ப்பிணி பெண்களுக்கு ஹைப்போ தைராய்டு இருந்தால், கருச்சிதைவு ஏற்படும் அல்லது பிறக்கும் குழந்தையின் மூளை பலவீனமாக இருக்கும். இந்த ஹைப்போ தைராய்டை கவனிக்காவிட்டால், அதனால் வேறு சில பிரச்சனைகளுக்கு உள்ளாகி அவஸ்தைப்படக்கூடும்.

ஹைப்போ தைராய்டு அறிகுறிகள் ஹைப்போ தைராய்டு இருந்தால், உடல் பருமன், சோர்வு, மன இறுக்கம், வறட்சியான சருமம் மற்றம் முடி உதிர்வது, மன நிலையில் ஏற்றத்தாழ்வு, முறையற்ற மாதவிடாய் சுழற்சி, வீக்கமான முகம், தலை வலி, மயக்கம், மறதி, குளிர்ச்சியான பாதம் மற்றும் கைகள் போன்ற அறிகுறிகள் தென்படும். எனவே உங்களுக்கு மேற்கூறிய அறிகுறிகள் தென்பட்டால், உடனே மருத்துவரை அணுகுவதோடு, கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அவை நிலைமையை மோசமாக்கிவிடும்.

ப்ராக்கோலி மற்றும் முட்டைக்கோஸ் தைராய்டு ஹார்மோன்கள் சுரப்பதற்கு அயோடின் அவசியம். ஆனால் இந்த காய்கறிகள் தைராய்டு சுரப்பி அயோடினை உறிஞ்ச விடாமல் தடுக்கும். எனவே ஹைப்போ தைராய்டு கொண்டவர்கள், ப்ராக்கோலி, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், டர்னிப் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

கோதுமை மற்றும் பார்லி தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் குளுட்டன் உள்ள உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக குளுட்டனானது, கோதுமை, பார்வி போன்ற தானியங்களில் இருக்கும். எனவே இந்த உணவுப் பொருட்களை அதிகம் எடுக்க வேண்டாம்.

பாஸ்ட் ஃபுட் பாஸ்ட் ஃபுட் உணவுகளில் கெட்ட கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால், இவற்றை தைராய்டு உள்ளவர்கள் சிறிது உட்கொண்டாலும், அது தைராக்ஸின் ஹார்மோனின் உற்பத்திக்கு இடையூறு விளைவிக்கும். எனவே பாஸ்ட் ஃபுட் உணவுகள் மட்டுமின்றி, எண்ணெயில் பொரித்த உணவுகளையும் எடுப்பதைத் தவிர்த்திடுங்கள்.

மயோனைஸ் மற்றும் வெண்ணெய் இந்த உணவுகளில் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. கொழுப்புக்கள் அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொண்டால், அவை தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டில் இடையூறு ஏற்பட்டு, அதனால் தைராக்ஸின் ஹார்மோனின் அளவு மேலும் குறையும்.

சோயா மற்றும் திணை இவற்றில் பைட்டோ ஈஸ்ட்ரோஜென் என்னும் தாவர ஹார்மோன் அதிகம் உள்ளது. ஆய்வு ஒன்றில், ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகமாக இருந்தால், தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டில் இடையூறு ஏற்பட்டு, தைராக்ஸின் ஹார்மோனின் அளவு குறையும் என்று தெரிய வந்துள்ளது. எனவே ஹைப்போ தைராய்டு உள்ளவர்கள், சோயா மற்றும் திணை உண்பதைத் தவிர்க்கவும்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு மற்றும் சோளம் சோளம், ஆளி விதை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்றவற்றில் சல்பர் அதிகம் உள்ளது. மேலும் இந்த உணவுப் பொருட்கள் தைராய்டு சுரப்பியால் அயோடினை உறிஞ்ச முடியாமல் செய்யும். ஆகவே இவற்றைத் தவிர்ப்பதும் நல்லது.

வெங்காயம், திராட்சை மற்றும் ஆப்ரிகாட் மேற்கூறிய உணவுப் பொருட்களும் தைராய்டு சுரப்பியின் இயக்கத்தில் இடையூறு ஏற்படுத்துவதோடு, தைராக்ஸின் ஹார்மோனின் உற்பத்தியையும் குறைக்கும். ஆகவே ஹைப்போ தைராய்டு உள்ளவர்கள் இந்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

அதிகப்படியான நார்ச்சத்து நார்ச்சத்து அதிகம் நிறைந்திருக்கும் உணவுப் பொருட்களான தானியங்கள், பழங்கள், காய்கறிகளை அதிக அளவில் ஹைப்போ தைராய்டு உள்ளவர்கள் எடுக்கக்கூடாது. அதற்காக முற்றிலும் தவிர்க்கவும் கூடாது. அளவாக உட்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், செரிமானம் சீராக நடைபெறாமல் போய்விடும்.

காபி மற்றும் எனர்ஜி பானங்கள் காபி, எனர்ஜி பானங்கள் போன்றவற்றில் காப்ஃபைன் அதிகம் உள்ளது. காப்ஃபைன் தைராய்டு பிரச்சனைக்கு எடுத்து வரும் மருந்துகளை தைராய்டு சுரப்பி உறிஞ்ச விடாமல் தடுக்கும். எனவே காப்ஃபைன் நிறைந்த பானங்களை ஹைப்போ தைராய்டு உள்ளவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

பால் பொருட்கள் தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் கால்சியம் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களை, தைராய்டு மருந்து மாத்திரைகளை உட்கொண்ட உடனேயே உண்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் கால்சியமானது தைராய்டிற்காக எடுத்து வரும் மருந்துகளின் சக்தியைக் குறைத்துவிடும். எனவே பால் பொருட்களை மருந்து மாத்திரைகள் எடுத்த சில மணிநேரங்கள் கழித்து எடுக்க வேண்டும்.

ஆல்கஹால் தைராய்டு பிரச்சனை இருந்தால், அது ஹைப்போவாக இருக்கட்டும் அல்லது ஹைப்பராக இருக்கட்டும், ஆல்கஹாலை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது தைராய்டு சுரப்பியையே பாதிக்கும்.

24 1437740431 2broccoliandcabbage

Related posts

தெரிந்துகொள்வோமா? ஆரஞ்சு பழத்தின் தோலில் நிறைந்துள்ள ஆச்சரியப்பட வைக்கும் நன்மைகள்!

nathan

pottukadalai benefits in tamil – பொட்டுக்கடலை நன்மைகள்

nathan

சுவையான வாழைப்பழ பிரட் ரெசிபி

nathan

இரத்தசோகை போக்கும் ராஜ்மா

nathan

தெரிஞ்சிக்கங்க…இரவு 9 மணிக்கு மேல் நிச்சயம் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்!!!

nathan

பச்சை பயறு அதிக சத்துக்கள் சாப்பிட்டுவர உடல் ஆரோக்கியம் பெறும். ..

nathan

எடையை வேகமாக குறைக்க சாப்பிடும் போது இத செஞ்சா போதும்!தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்பு தொடர்பான நோய் வராமல் காத்துக் கொள்ளலாம்…!

nathan

பல பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கும் மாதுளை இலைகள்-தெரிஞ்சிக்கங்க…

nathan