30.8 C
Chennai
Saturday, Jul 5, 2025
beens
ஆரோக்கிய உணவு

பீன்ஸ் சாப்பிட்டு வந்தால் நீரிழிவை கட்டுப்படுத்தும்!

இன்றைய தலைமுறையினர் காய்கறிகளை சரியாக சாப்பிடாமல் ஜங்க்ஃபுட் உணவுகளை மட்டும் அதிகம் உட்கொள்வதால் அவர்களின் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு, இதன் மூலம் அடிக்கடி நோய்வாய் படுகின்றனர்.
மேலும் வீட்டில் உள்ளோர் எவ்வளவுதான் காய்கறிகளை வாங்கி நன்கு சமைத்துக் கொடுத்தாலும், அதை சாப்பிடுவதில்லை. குறிப்பாக பீன்ஸ் பொரியல் என்றால் பலர் சாப்பிடாமலேயே இருப்பார்கள்.
புற்றுநோயை‌த் தடுக்கும்:
பீன்ஸ் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து புற்றுநோ‌ய் வருவதற்கான வாய்ப்பைத் தடுக்கும்.
நீரிழிவை கட்டுப்படுத்தும்:
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைப்பதற்கு பீன்ஸ் பெரிதும் உதவியாக இருக்கும். ஏனெனில் அதில் உள்ள கார்போஹைட்ரேட் மெதுவாக கரைவதால் அது இரத்த‌த்தில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை சேர்வதை‌த் தடுக்கும்.
வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துகள்:
பின்ஸில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள், புரோட்டின், நார்ச்சத்து, காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட், வைட்டமின்கள் மற்றும் கனிமச் சத்துக்களான பொட்டாசியம், ஃபோலேட், காப்பர், இரும்புச்சத்து, மாங்கனி‌ஷ், பாஸ்பரஸ் மற்றும் மக்னீசியம் இருப்பதால், இது உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதை‌த் தடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். இதயத்திற்கு சிறந்தது.
பீன்ஸில் உள்ள சிலிகான் என்னும் கனிமச்சத்து எலும்புகளை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும். மேலும் மற்ற காய்கறிகளை விட இந்த காய்கறியில் உள்ள சிலிகான் எளிதில் உறிஞ்சப்படுவதோடு, செரிமானமும் அடையும்.
தானியங்களுக்கு பதிலாக பீன்ஸ்:
சிலருக்கு கோதுமை, பார்லி போன்ற தானியங்களில் உள்ள க்ளுடனால் அலர்ஜி ஏற்படலாம். அத்தகையவர்கள் தானியங்களுக்கு பதிலாக பீன்ஸ் சாப்பிட்டால், தானியங்களால் கிடைக்கக் கூடிய சத்துக்களை பீன்ஸ் மூலம் பெறலாம்.
முதுமையை எதிர்த்துப் போராடும்:
பச்சை பீன்ஸில் உள்ள கரோட்டினாய்டுக‌ள் சருமத்தின் தரத்தை அதிகரித்து, முதுமையை எதிர்த்துப் போராடும்.

beens

Related posts

ஆசிய, ஆப்ரிக்கர்களின் ஆரோக்கியத்திற்கு இந்த பால் தான் காரணம் என்றால் நம்ப முடிகிறதா?

nathan

40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான‌ 10 மிக முக்கியமான வைட்டமின்கள்,beauty tips only tamil,tamil beauty tips in tamil

nathan

புதினா சர்பத்

nathan

முடி வளர்ச்சிக்கு உதவும் வைட்டமின்கள்.

nathan

கடலை எண்ணெய் தீமைகள்

nathan

உங்களுக்கு தெரியுமா சிறுநீரகத்தை எளிமையாக சுத்தமாக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

nathan

குளிரூட்டப்பட்ட உணவு ஆரோக்கியமானதா? தொிந்துகொள்ளுங்கள்…………..

nathan

கொண்டைக்கடலை சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

உடலின் வலிமையை அதிகரிக்கும் உணவுகள்!!!

nathan