29.1 C
Chennai
Monday, Jun 17, 2024
201610140839556820 how to make aval kichadi SECVPF
சிற்றுண்டி வகைகள்

சத்தான அவல் கிச்சடி செய்வது எப்படி

டயட்டில் இருப்பவர்கள், வயதானவர்கள் அவல் சேர்த்து செய்த உணவுகளை சாப்பிடலாம். அவல் கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சத்தான அவல் கிச்சடி செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

சிவப்பு அவல் – அரை கப்,
தோலுடன் கூடிய உடைத்த பாசிப் பயறு – 1 கப்,
பெரிய வெங்காயம் – 1,
தக்காளி – 2,
பச்சை மிளகாய் – 2,
இஞ்சி – 1 துண்டு,
பூண்டு – 4 பல்,
புதினாவும் கொத்தமல்லியும் தலா – 10 இலை,
சோம்பு – 1 சிட்டிகை,
சீரகம் – 1 சிட்டிகை,
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை,
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்,
நெய் – 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.

செய்முறை:

* அவலை அரை மணி நேரம் நீரில் ஊற வையுங்கள்.

* பயறை இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து வேகவையுங்கள். முக்கால் பதம் வெந்ததும் ஊறவைத்த அவல் (பிழிந்தெடுத்து), மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் நெய் ஆகியவற்றைச் சேர்த்து பத்து நிமிடம் வேக வையுங்கள்.

* வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, புதினா, கொத்தமல்லி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.

* வாணலியில் எண்ணெய், மீதமுள்ள நெய்யை ஊற்றிச் சூடாக்கி, சோம்பு, சீரகத்தைத் தாளித்த பின் வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, புதினா, கொத்தமல்லி ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள்.

* பிறகு அதில் தக்காளி சேர்த்து வதக்கி அதனுடன் அவல், பயறு கலவை, தேவையான உப்பு சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.

* அவல் கிச்சடி ரெடி. 201610140839556820 how to make aval kichadi SECVPF

Related posts

லசாக்னே

nathan

மொறு மொறுப்பான உருளைக்கிழங்கு சிப்ஸ்

nathan

மாலை நேர சிற்றுண்டி தயிர் சேமியா

nathan

ஸ்பெஷல் கொழுக்கட்டை

nathan

கேழ்வரகு உளுந்து தோசை

nathan

பொங்கல் ஸ்பெஷல்: கரும்புச்சாறு பொங்கல்

nathan

ரஸ்க் லட்டு

nathan

ஃபுரூட் கேக்

nathan

மரவள்ளிக்கிழங்கு கொழுக்கட்டை

nathan