செராமிக் பாத்திரத்தில் சமைத்து சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்குமா என்பதை கீழே பார்க்கலாம்.
செராமிக் பாத்திரத்தில் சமைப்பது ஆபத்தானதா?
காலத்திற்கு ஏற்றபடி சமைக்கும் பாத்திரங்கள் மாறிவருகின்றன. இவற்றில் சமீபகாலமாக செராமிக் பாத்திரங்கள் பிரபலமாக ஆரம்பித்திருக்கின்றன. செராமிக் பாத்திரங்களில் சமைப்பது பாதுகாப்பானதா என்பதை பார்க்கலாம்.
இப்போது நான்ஸ்டிக்கின் அடுத்த வெர்ஷனாக செராமிக் பாத்திரங்களை வெளிநாடுகளில் அதிகம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். நாம் ஏற்கெனவே பயன்படுத்தி வரும் பீங்கான் பாத்திரத்தைத்தான் ஆங்கிலத்தில் செராமிக் பாத்திரம் என்கிறார்கள்.
செராமிக் பாத்திரத்தில் பல சாதகமான விஷயங்கள் இருக்கின்றன. பார்ப்பதற்குக் கவர்ச்சிகரமாக இருக்கும். அலுமினியப் பாத்திரம், இரும்பு போன்ற உலோகங்களைப் போல அல்லாமல், செராமிக் பாத்திரங்களில் சமைக்கும்போது பாத்திரத்தின் வெப்பம் சீராக இருக்கும். நீண்ட நேரமாக, அதிக வெப்பத்தில் அசைவ உணவு போன்றவற்றை சமைப்பதற்கும் செராமிக் பொருத்தமானது.
Molten glass powder என்ற கண்ணாடி மூலப்பொருளை வைத்துத்தான் செராமிக் பாத்திரங்கள் தயாரிக்கப்படுகின்றன. அதிக வெப்பத்தைத் தாங்கிக் கொள்வதற்குக் காரணம் இந்த Molten glass powderதான். செராமிக் பாத்திரம் துருப்பிடிக்காது என்பதும் மற்றொரு பிளஸ். பாலீஷ் செய்யப்பட்டிருப்பதால் சமைத்த பிறகு சுத்தம் செய்வதும் எளிது. நான்ஸ்டிக் பாத்திரங்களில் புற்றுநோய் அபாயம் கொண்ட Teflon, PFOA போன்ற வேதிப்பொருட்கள் இருப்பதால், அவற்றைத் தவிர்த்துவிட்டு செராமிக் பாத்திரங்களை சமீபத்தில் அதிகமாக வெளிநாடுகளில் பயன்படுத்துகிறார்கள்.
அதற்காக, செராமிக் பாத்திரத்தில் பிரச்சனையே இல்லை என்று சொல்லிவிட முடியாது. செராமிக் பாத்திரத்தின் பளபளப்புக்காக லெட், காட்மியம் போன்ற ஹெவி மெட்டல்கள் பயன்படுத்தப்படுகின்றன. நீண்ட நாட்களாக செராமிக் பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டு வந்தால், உணவில் இந்த ஹெவி மெட்டல்கள் கலப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
இந்த கோட்டிங் இல்லாத செராமிக் பாத்திரங்களும் வர ஆரம்பித்திருக்கின்றன. கிடைத்தால் அதையும் பயன்படுத்தலாம். நான்ஸ்டிக் பாத்திரங்களில் எண்ணெய் சேர்க்கக் கூடாது என்று சொல்வார்கள். அதற்கு எதிராக, செராமிக் பாத்திரத்தில் எண்ணெய் சேர்க்காமல் சமைக்கக் கூடாது என்கிறார்கள்.
நாம் கவனமாகப் பயன்படுத்தும்போது எண்ணெய் சேர்க்க வேண்டும் என்று அவசியம் இல்லை. நம்மைப் பொறுத்தவரை எவர்சில்வர் பாத்திரங்கள் ஓரளவு பாதுகாப்பானவை. நிக்கல், குரோமியம் போன்ற வேதிப்பொருட்களின் கலப்பு இருந்தாலும், அவை மிகவும் குறைவான அளவிலேயே இருக்கின்றன. அதனால் எவர்சில்வர் பாத்திரங்கள் அவ்வளவு தீங்கு இல்லை.”
செராமிக் பாத்திரத்தின் பளபளப்புக்காக லெட், காட்மியம் போன்ற ஹெவி மெட்டல்கள் பயன்படுத்தப்படுகின்றன. நீண்ட நாட்களாக செராமிக் பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டு வந்தால் உணவில் இந்த ஹெவி மெட்டல்கள் கலப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.