27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
aAEpOJt
சைவம்

முருங்கைக்காய் கூட்டுச்சாறு

என்னென்ன தேவை?

முருங்கைக்காய் – 1 கப் (சிறிய துண்டுகளாக அரிந்தது),
புளி கரைசல் – 1/2 கப்,
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.

வறுத்து அரைக்க…

துவரம்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்,
தனியா – 2 டீஸ்பூன்,
சீரகம் – 1 சிட்டிகை,
காய்ந்த மிளகாய் – 4,
சாம்பார் வெங்காயம் (உரித்தது) 1 கப்,
எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
கடுகு – 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிது,
கருவடகம் – 1 டேபிள்ஸ்பூன்,
சாம்பார் வெங்காயம் – 1 டேபிள்ஸ்பூன் (ஒன்றிரண்டாக மசித்தது),
மஞ்சள் தூள் சிறிது.

எப்படிச் செய்வது?

முதலில் முருங்கைக்காயை உரித்த சாம்பார் வெங்காயத்துடன் மஞ்சள் தூள், உப்பு போட்டு புளி தண்ணீரில் வேக வைக்க வேண்டும். புளி வாசனை போக கொதிக்கவிடவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் துவரம்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், சீரகம் போட்டு சிவந்ததும் தனியாக எடுத்து வைக்க வேண்டும். அதே கடாயில் வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.

எல்லாவற்றையும் விழுதாக அரைத்து, வேக வைத்த முருங்கைக்காயில் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கருவடகம் போட்டு சிவந்ததும் கூட்டுச்சாறில் சேர்க்கவும். தட்டிய வெங்காயத்தையும் சிறிது எண்ணெயில் நன்றாக வதக்கி கூட்டுச்சாறில் சேர்க்கவும்.aAEpOJt

Related posts

மிளகு, பூண்டுடன் மீன் குழம்பு

nathan

வெள்ளரிக்காய் தால்

nathan

பரோட்டா!

nathan

தந்தூரி மஷ்ரூம்

nathan

சேப்பங்கிழங்கு சாப்ஸ்

nathan

கத்தரிக்காய் பச்சடி

nathan

சத்தான குதிரைவாலி தேங்காய் சாதம்

nathan

சத்து நிறைந்த முருங்கை கீரை – வாழைத்தண்டு பொரியல்

nathan

சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் ஆலூ சப்ஜி

nathan