28.6 C
Chennai
Monday, May 20, 2024
1474440413 2182
சைவம்

சுவையான சேப்பங்கிழங்கு கிரேவி

தேவையான பொருட்கள்:

சேப்பங்கிழங்கு – கால் கிலோ
மிளகாய்ப்பொடி – 2 தேக்கரண்டி
தனியாப்பொடி – 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
கரம் மசாலாப்பொடி – அரை தேக்கரண்டி
தேங்காய் – 3
உப்பு – 3
எண்ணெய் – தேவையான அளவு
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
வெங்காயம் – 2
சின்ன வெங்காயம் – 10
பச்சைமிளகாய் – 2
கடுகு, உளுத்தம் பருப்பு – ஒரு தேக்கரண்டி
பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ – சிறிது

செய்முறை:

சேப்பங்கிழங்கில் உப்பு, மஞ்சள் தூள் சிறிது சேர்த்து குழையாமல் வேகவைத்து கொள்ளவும். தோலுரித்து இரண்டாக நறுக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கிழங்கை பொரித்து எண்ணெய்யை வடித்து விடவும்.

பொரித்த பிறகு எண்ணெய்யை குறைத்து விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, பட்டை, அன்னாசிப்பூ தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பிறகு சின்ன வெங்காயம் போட்டு வதக்கி, மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி, மஞ்சள் தூள், கரம் மசாலாப்பொடி, உப்பு போன்றவற்றை வதக்கவும்.

அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி, கீறிய பச்சைமிளகாய் போட்டு வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதித்தவுடன் தேங்காயை அரைத்து ஊற்றி பொரித்த கிழங்கை போட்டு திக்கானவுடன் இறக்கவும்.1474440413 2182

Related posts

சாமை சாம்பார் சாதம் செய்வது எப்படி

nathan

வெஜிடேபிள் கறி

nathan

கார்ன் குடைமிளகாய் கிரேவி

nathan

பாகற்காய் பொரியல்

nathan

கொண்டக்கடலை தீயல்

nathan

பனீர் ஃப்ரைடு ரைஸ் செய்முறை

nathan

பனீர் பிரியாணி

nathan

சோளம் மசாலா ரைஸ்

nathan

கிராமத்து பச்சை மொச்சை குழம்பு….

nathan