27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
skin beauty give vegetarian dishes
ஆரோக்கிய உணவு

தோலுக்கு மினுமினுப்பை தரும் சைவ உணவுகள்

சைவ உணவுகளை எடுத்துக்கொள்வது உங்களது உடல் நலனுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் நல்லது என்று பார்க்கலாம்.

தோலுக்கு மினுமினுப்பை தரும் சைவ உணவுகள்
சைவ உணவுகளை எடுத்துக்கொள்வது உங்களது உடல் நலனுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் நல்லது என்பது குறித்து மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் தரும் விளக்கத்தை இங்கே பார்க்கலாம்.

* நார்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி, பசலைக்கீரை மற்றும் முட்டைகோஸ் ஆகியவை சைவ உணவ வகைகளில் மிக முக்கியமானவை. உடலில் சேரும் நச்சுகளை அகற்றும் திறன் மேற்கூறிய காய்கறிகளுக்கு உண்டு. அதே சமயம் முட்டை, மீன் மற்றும் இறைச்சி போன்றவற்றில் புரதச்சத்து இருக்கும் அளவுக்கு நார்ச்சத்து இருப்பதில்லை.

* இறைச்சி உடலில் புரதத்தை அதிகமாக்கி, கொழுப்பை கூட்ட வழி வகுக்க கூடியது. மேலும் நமது சிறுநீரகத்திற்கு அதிக வேலைப் பளுவை ஏற்படுத்த செய்வதோடு, எலும்பிலுள்ள கால்சியத்தையும் உறிஞ்சி விடுகிறது. அதே சமயம் சைவ உணவில் இந்த பிரச்சினை இல்லை.

* அசைவ உணவு அதிகம் எடுத்துக்கொள்பவர்களுக்கு கார்போஹைட்ரேட் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பும் அதிகம் உண்டு. இதனால் உடல் தனது இயக்கத்திற்கு தேவையான சக்தியை கார்போஹைட்ரேட்டிலிருந்து பெறுவதற்கு பதிலாக சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பிலிருந்து எடுத்துக்கொள்ளும் கீட்டோனியம் என்ற நிலை ஏற்படும்.

* சைவ உணவுகள் மூலமாக கிடைக்கும் ஹார்போஹைட்ரேட் படிப்படியாக ஜீரணமாக உடலுக்கு தேவையான குளுகோஸ் சத்தை சீராக அளிக்கும். அதே சமயம் கொழுப்பும், புரதமும் அதிகம் நிறைந்த இறைச்சி உணவு ஜீரணமாகவே அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சில சிமயங்களில் சிலருக்கு அது சிரமமாக கூட ஆகிவிடும்.

* பீட்ரூட், தக்காளி, பூசணி, பாகற்காய் போன்ற சைவ உணவுகள் ரத்தத்தை நன்கு சுத்திகரிப்பதோடு, தோலுக்கு மினுமினுப்பையும் கொடுக்கிறது. அத்துடன் கொய்யா, ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்களை உண்பதும் மேனிக்கு மினுமினுப்பை கூட்டும்.skin beauty give vegetarian dishes

Related posts

சர்க்கரை நோயாளிகள் சாப்பிட கூடாத உணவுகள்

nathan

பாலுடன் வாழைப்பழத்தை சாப்பிட்டால் நல்லதா? கேட்டதா?

sangika

நலம் வாழ உணவுகளில் தவிர்க்க வேண்டியவை எவை?

nathan

உடலுக்குத் தேவை பொஸிட்டிவ் உணவுகளே!

nathan

உடல் நலத்தை காக்கும் பனை மரம்!!!

nathan

இதய நோயால் மரணம் ஏற்படுவதைத் தடுக்கும் அற்புத பானம்!….

sangika

தொண்டை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் சுக்கு மிளகு பால்

nathan

‘நல்ல’ எண்ணெய்

nathan

குழந்தைகளின் உடல் நலனை பாதுகாக்கும் இந்த பொடி பற்றி உங்களுக்கு தெரியுமா?

nathan