29.7 C
Chennai
Thursday, Mar 12, 2026
201609120832565149 nutritious banana stem barley soup SECVPF
சூப் வகைகள்

சத்தான வாழைத்தண்டு – பார்லி சூப்

டயட்டில் இருப்பவர்கள் இந்த சூப்பை தினமும் செய்து குடிக்கலாம். இந்த சூப்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சத்தான வாழைத்தண்டு – பார்லி சூப்
தேவையான பொருட்கள் :

வாழைத்தண்டு – 1
பார்லி – 50 கிராம்
தக்காளி – 1
இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
அரிசி – 1 கைப்பிடி
பருப்பு – சிறிதளவு
நெய் – 1/2 ஸ்பூன்
மிளகுத்தூள், உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* வாழைத் தண்டை நார் எடுத்து சிறிதாக வெட்டிக் கொள்ளுங்கள்.

* தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வெட்டிய வாழைத்தண்டுடன் அரிசி, பருப்பு, பார்லி தேவையான தண்ணீர் சேர்த்து குக்கரில் போட்டு வேக வைத்துக் கொள்ளுங்கள்.

* வெந்ததும் தண்ணீரை வடித்துக் கொள்ளுங்கள்.

* நெய்யில் காய்ந்த மிளகாய், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கிக் கொள்ளுங்கள்.

* தக்காளி நன்றாக வதங்கியதும் வடித்து வைத்திருக்கும் நீரை விட்டு நன்றாகக் கொதிக்க விடுங்கள்.

* கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கி தேவையான உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறுங்கள்.

* சத்தான, சுவையான வாழைத்தண்டு – பார்லி சூப் ரெடி. 201609120832565149 nutritious banana stem barley soup SECVPF

Related posts

இனிப்பு சோளம் சூப்

nathan

ஓட்ஸ் தக்காளி சூப்

nathan

வெற்றிலையில் நெல்லி ரசம் எப்ப‍டி வைப்ப‍து?…

sangika

முட்டைக்கோஸ் – கேரட் சூப் செய்வது எப்படி

nathan

புளிச்ச கீரை சூப்

nathan

சுவையான சத்தான வாழைத்தண்டு சூப்

nathan

சுவையான மீன் சூப்

nathan

இதோ அற்புதமான எளிய தீர்வு- வயிற்று உபாதைகளுக்கு தீர்வு தரும் பூண்டு சூப்

nathan

வெஜிடேபிள் பாஸ்தா சூப்

nathan