26.2 C
Chennai
Sunday, Nov 24, 2024
f35
சிற்றுண்டி வகைகள்

ராகி கொழுக்கட்டை

மாலையில் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஓர் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால், ராகி கொழுக்கட்டை செய்து கொடுங்கள். இது மிகவும் ஆரோக்கியமான ஓர் ஸ்நாக்ஸ். மேலும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

சரி, இப்போது அந்த ராகி கொழுக்கட்டையை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்: ராகி மாவு – 1 கப் பாசிப்பருப்பு – 1 கையளவு துருவிய தேங்காய் – 1/4 கப் பொடித்த வெல்லம் – 3/4 கப் ஏலக்காய் பொடி – 1 டீஸ்பூன்

செய்முறை: முதலில் பாசிப்பருப்பை ஒரு வாணலியில் போட்டு 3 நிமிடம் வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரில் பாசிப்பருப்பைப் போட்டு, அதில் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும், குக்கரைத் திறந்து நீரை வடித்து, தனியாக பருப்பை வைத்துக் கொள்ளவும். பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ராகி மாவைப் போட்டு 2 நிமிடம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும் மற்றும் ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு 1/2 கப் நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, வெல்லம் கரைந்ததும், இறக்கி குளிர வைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு அகன்ற பாத்திரத்தில் வறுத்த ராகி மாவு, பாசிப்பருப்பு, தேங்காய், வெல்லத் தண்ணீர், ஏலக்காய் பொடி சேர்த்து தண்ணீர் தெளித்து, மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். அடுத்து இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடேற்ற வேண்டும். தண்ணீர் சூடாவதற்குள், இட்லி தட்டில் பிசைந்து வைத்துள்ள மாவை கொழுக்கட்டைகளாகப் பிடித்து வைக்க வேண்டும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், இட்லி தட்டை இட்லி பாத்திரத்தினுள் வைத்து, மூடி வைத்து 10-15 நிமிடம் வேக வைத்து இறக்கினால், ராகி கொழுக்கட்டை ரெடி!!!

f35

Related posts

புத்தாண்டு புது விருந்து: பச்சைப் பயறு வடை

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான டைமண்ட் பிஸ்கெட்

nathan

பேபி கார்ன் பஜ்ஜி

nathan

மணத்தக்காளிக்கீரைத் துவையல்

nathan

சாமை சிறுபருப்பு  முள்ளு முறுக்கு

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் முந்திரி பக்கோடா

nathan

தால் கார சோமாஸி

nathan

சுகர்ஃப்ரீ ஓட்ஸ்  – பேரீச்சம் பழ லட்டு

nathan

தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான வடைகறி ரெசிபி

nathan