30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
சிற்றுண்டி வகைகள்

பிரட் ஆனியன் பொடிமாஸ்

மாலையில் பசியுடன் இருக்கும் குழந்தைகளுக்கு அருமையான சுவையில் 10 நிமிடத்தில் ஏதேனும் செய்து கொடுக்க நினைத்தால், பிரட் ஆனியன் பொடிமாஸ் செய்து கொடுங்கள். இது நிச்சயம் உங்கள் குழந்தை விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும்.

மேலும் பேச்சுலர்கள் கூட இதனை காலையில் செய்து சாப்பிடலாம். சரி, இப்போது அந்த பிரட் ஆனியன் பொடிமாஸை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்: பிரட் – 8 துண்டுகள் வெங்காயம் – 2 (நறுக்கியது) பச்சை மிளகாய் – 2 கடுகு – 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன் இஞ்சி – 10 கிராம் (பொடியாக நறுக்கியது) மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு கொத்தமல்லி – சிறிது மிளகு – 1 டீஸ்பூன் சர்க்கரை – 1 டீஸ்பூன் எலுமிச்சை – 1

செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, பின் இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கி விட வேண்டும். பின் அதில் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பின்பு அதில் பிரட் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி இறக்கி, மிளகுத் தூள் மற்றும் எலுமிச்சை சாற்றினை ஊற்றி பிரட்டி, கொத்தமல்லியைத் தூவினால், பிரட் ஆனியன் பொடிமாஸ் ரெடி!!!

Related posts

சூப்பரான இறால் பஜ்ஜி முயன்று பாருங்கள்…

sangika

தஹி பப்டி சாட்

nathan

வெரைட்டியாக ருசிக்க… 30 வகை உருளைக்கிழங்கு சமையல்

nathan

சுவையான உருளைக்கிழங்கு வடை

nathan

சத்தான மிளகு அடை

nathan

சுவையான தக்காளி பஜ்ஜி

nathan

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ராஜ் கச்சோரி

nathan

சிவப்பு அரிசி கொழுக்கட்டை

nathan

செட் தோசை

nathan