அசைவ வகைகள்

குழந்தைகளுக்கு விருப்பமான டீப் ஃபிரை எக்

ஓட்டல்களில் இந்த டீப் ஃபிரை எக்(Deep Fried Eggs) மிகவும் பிரபலம். இதை எளிய முறையில் வீட்டில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு விருப்பமான டீப் ஃபிரை எக்
தேவையான பொருட்கள் :

முட்டை – 5
சோள மாவு – 2 ஸ்பூன்
பிரட் தூள் (Panko Breadcrumbs) – அரை கப்
துருவிய சீஸ் – அரை கப்
எண்ணெய் – பொரிக்க
மிளகு தூள் – அரை தேக்கரண்டி
உப்பு – சிறிதளவு

செய்முறை :

* 1 முட்டையை ஒரு கிண்ணத்தில் உடைத்து ஊற்றி நன்றாக அடிக்கவும்.

* இன்னொரு கிண்ணத்தில் சோள மாவு, சிறிது உப்பு, மிளகு தூள் கலந்து வைக்கவும்.

* மற்றொரு கிண்ணத்தில் துருவிய சீஸ், பிரட் தூள், கலந்து வைக்கவும்.

* 4 முட்டையை வேகவைத்து ஓட்டை உடைத்து வைக்கவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

* முட்டையை ஒவ்வொன்றாக எடுத்து அதை சோள மாவில் பிரட்டி, முட்டை கலவையில் முக்கி, சீஸ் கலவையில் பிரட்டி எண்ணெய் போட்டு பொரிக்கவும்.

* சுவையான டீப் ஃபிரை எக் ரெடி.

Related posts

சுவையான தயிர் சிக்கன் வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

nathan

கேரளா ஸ்டைல் மத்தி மீன் குழம்பு

nathan

செஸ்வான் சிக்கன் நூடுல்ஸ்

nathan

கேரளா முட்டை அவியல்

nathan

உருளைக்கிழங்கு சாதம் செய்வது எப்படி

nathan

சுவையான நாட்டுக்கோழி குழம்பு செய்வது எப்படி

nathan

சன்டே ஸ்பெஷல் விரால் மீன் குழம்பு

nathan

செட்டிநாடு ஸ்டைல் இறால் குழம்பு

nathan

கிராமத்து கருவாட்டுக் குழம்பு

nathan