30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
அசைவ வகைகள்

இறால் உருளைக்கிழங்கு ஃபிரை

குழந்தைகளுக்கு மீனை விட இறால் மிகவும் பிடிக்கும். அதிலும் இந்த இறால் உருளைக்கிழங்கு ஃபிரை மிகவும் சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இறால் உருளைக்கிழங்கு ஃபிரை
தேவையான பொருட்கள் :

இறால் – 1/2 கிலோ
உருளை கிழங்கு – 2 பெரியது
மிளகாய் தூள் – தேவையான அளவு
மிளகு தூள் – அரை ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
மஞ்சள் தூள் – சிறிதளவு
எண்ணெய் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* இறாலை கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.

* உருளைக்கிழங்கை தோலை நீக்கி விட்டு சிறிதாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் இறால், உருளை கிழங்கை போட்டு அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், கறிவேப்பிலை, உப்பு போட்டு கிளறி 1 மணி நேரம் ஊறவிடவும்

* வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் இறால் கலவையை போட்டு நன்றாக 5 நிமிடம் கிளறவும். அடுத்து அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி வைத்து வேக விடவும். நன்றாக வெந்து பொன்னிரமாக வந்ததும் இறக்கி சூடாக பரிமாறவும்.

* இறால் 10 நிமிடத்தில் வெந்து விடும்.

* இறால் உருளை கிழங்கு ஃபிரை ரெடி.

Related posts

காரைக்குடி கோழி குழம்பு செய்முறை விளக்கம்

nathan

இறால் மக்ரோனி : செய்முறைகளுடன்…!

nathan

சீரக மீன் குழம்பு

nathan

மட்டர் பன்னீர்

nathan

சுவையான நாட்டுக்கோழி குழம்பு செய்வது எப்படி

nathan

வறுத்து அரைத்த மீன் கறி

nathan

கோங்குரா சிக்கன்

nathan

மட்டன் எலும்பு குழம்பு செய்வது எப்படி?

nathan

நாட்டுக்கோழி வறுவல்

nathan