டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த உணவு இந்த ஒட்ஸ் வெண்பொங்கல். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
சுவையான சத்தான ஒட்ஸ் வெண்பொங்கல்
தேவையான பொருட்கள் :
ஒட்ஸ் – 1 கப்
பாசிப்பருப்பு – 1/2 கப்
உப்பு – தேவைக்கு
மஞ்சள்தூள் – 1 சிட்டிகை
தாளிக்க :
மிளகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
இஞ்சி -1 சிறுதுண்டு
முந்திரி – தேவைக்கு
நெய் – 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – 1/2 டேபிள்ஸ்பூன்
செய்முறை :
* இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கவும்.
* ஓட்சை வெறும் கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும்.
* பாசிப்பருப்பை 1 1/2 கப் நீர்விட்டு மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேகவைக்கவும்.
* வெந்ததும் அதில் உப்பு, ஒட்ஸை போட்டு 8 நிமிடம் வேகவைத்து இறக்கவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து பொங்கலில் சேர்த்து கிளறவும்.
* சுவையான சத்தான ஒட்ஸ் வெண்பொங்கல் ரெடி.
குறிப்பு :
பாசிப்பருப்பு வேகவைக்கும் நேரம் தவிர மற்றபடி இந்த ஒட்ஸ் பொங்கல் செய்வதற்க்கு ரொம்ப ஈஸி. சுவையும் நன்றாக இருக்கும்.