30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
சிற்றுண்டி வகைகள்

வாழைத்தண்டு துவையல் செய்வது எப்படி?

வாரம் ஒருமுறை வாழைத்தண்டு சமைத்து சாப்பிடுவது நல்லது. இப்போது வாழைத்தண்டு துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

வாழைத்தண்டு – பெரியது 1,
உளுத்தம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 4,
புளி – கொட்டைப்பாக்கு அளவு,
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

* வாழைத்தண்டை நார் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயில் அரை டீஸ்பூன் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் போட்டு வறுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.

* மறுபடியும் அரை டீஸ்பூன் எண்ணெய் விட்டு, அதில் வாழைத்தண்டை போட்டு நன்றாக வதக்கி ஆற வைக்கவும்.

* மிக்சியில் வறுத்த பருப்பு வகைகளை போட்டு நன்கு பொடித்த பின் வாழைத்தண்டு, உப்பு, புளி, சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

* சுவையான வாழைத்தண்டு துவையல் ரெடி!

குறிப்பு: வாழைத்தண்டில் தண்ணீர் இருப்பதால் அரைப்பதற்கு நீர் அதிகம் தேவைப்படாது.

Related posts

கார்ர பெண்டலம் பிட்டு

nathan

சூப்பரான இட்லி மஞ்சூரியன் செய்முறை விளக்கம்

nathan

கம்பு புட்டு

nathan

பசியைத் தூண்டும் சீரக துவையல்

nathan

சுவையான கம்பு காய்கறி கொழுக்கட்டை

nathan

கேரளா உன்னி அப்பம்

nathan

சுவையான சத்தான கோதுமை ரவை பொங்கல்

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் ஃப்ரைடு சிக்கன் மொமோஸ்

nathan

அரிசி வடை

nathan