30.3 C
Chennai
Thursday, Aug 27, 2026
சிற்றுண்டி வகைகள்

பொரி உருண்டை

தேவையானவை :

பொரி – 250 கிராம்

குண்டு வெல்லம் – 200 கிராம்

ஏலக்காய் – 5 (பொடி செய்தது)

செய்முறை :

1.முதலில் பொரியை வெறும் வாணலியில் போட்டு அடுப்பை குறைந்த தணலில் வைத்து லேசாக வறுத்துக் கொள்ளவும்.

2.அடுத்ததாக வெல்லத்தை நன்றாக உடைத்து 1/4 டம்ளர் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும்.

3. பாகு லேசான கம்பி பதம் வந்ததும் ஏலக்காய் பொடி சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

4.பின்னர்இறக்கி வைத்த வெல்லப் பாகில் வறுத்த பொரியைப் போட்டு நன்றாக கிளறவும்.

5. வெல்லப்பாகு சூடு ஆறுவதற்குள் பொரி கலவையை தேவையான அளவு உருண்டைகளாக பிடிக்கவும்.

6. சூடு ஆறினால் உருண்டை பிடிக்க வராது. அப்படி சூடு ஆறிவிட்டால் மீண்டும் அடுப்பில் லேசான தணலில் வைத்து, லேசாக கிளறி அடுப்பிலிருந்து இறக்கி வைத்து,

மீண்டும் உருண்டை பிடிக்கலாம்.

Related posts

சூப்பரான ஸ்நாக்ஸ் நட்ஸ் குக்கீஸ்

nathan

உருளைக்கிழங்கு பஜ்ஜி

nathan

செட்டிநாடு பாசிப்பருப்பு நெய் உருண்டை

nathan

பிரண்டை சப்பாத்தி

nathan

பாசிப்பருப்பு டோக்ளா

nathan

மினி பார்லி இட்லி

nathan

கோதுமை – சிவப்பு அவல் சப்பாத்தி

nathan

சில்லி -  கார்லிக் ஆனியன் லோட்டஸ்

nathan

சுவையான … இறால் வடை

nathan