29.7 C
Chennai
Saturday, Jul 11, 2026
சிற்றுண்டி வகைகள்

சுவையான சத்தான பாதாம் ராகி மால்ட்

டீ அல்லது காபி போன்ற பானங்களை குடிப்பதற்கு பதிலாக இந்த ராகி மால்ட் குடித்தால், உடல் வலிமையுடன் இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சுவையான சத்தான பாதாம் ராகி மால்ட்
தேவையான பொருட்கள்:

கேழ்வரகு மாவு – 5 டேபிள் ஸ்பூன்
பால் – 2 கப்
தண்ணீர் – அரை கப்
சர்க்கரை – 2 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்
பாதாம் பொடி/நறுக்கிய பாதாம் – 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

* கேழ்வரகு மாவை வாணலியில் போட்டு 5 நிமிடம் வாசனை வரும் வரை வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* 1/2 கப் பாலில் ராகி மாவை சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு மீதமுள்ள பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விட வேண்டும். பாலானது கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் ராகி பேஸ்ட் சேர்த்து கட்டிகள் சேராதவாறு கைவிடாமல் தொடர்ந்து கிளறி விட வேண்டும்.

* பிறகு அதில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு பச்சை வாசனை போக கிளறி விட வேண்டும்.

* இறுதியில் அதில் ஏலக்காய் பொடி, தேன் சேர்த்து கிளறி இறக்கி, பாதாம் பொடியை சேர்த்து பரிமாறவும்.

* சுவையான சத்தான பாதாம் ராகி மால்ட் ரெடி!!!

Related posts

ஸ்வீட் கார்ன் சுண்டல் செய்வது எப்படி

nathan

சிவப்பு அவல் புட்டு

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் பன்னீர் உருளைக்கிழங்கு பால்ஸ்

nathan

சூப்பரான ஸ்நாக்ஸ் லாலிபாப் செய்வது எப்படி

nathan

பஞ்சாபி ஸ்பெஷல் பன்னீர் குல்சா

nathan

நவராத்திரி நல்விருந்து! – நெய் அப்பம்

nathan

வாழைப்பூ வடை

nathan

காஞ்சிபுரம் இட்லி

nathan

எலுமிச்சை இடியாப்பம்

nathan