27.9 C
Chennai
Sunday, Jun 23, 2024
26 1435306070 chicken malai tikka
அசைவ வகைகள்

ரமலான் ஸ்பெஷல்: சிக்கன் மலாய் டிக்கா

இதுவரை சிக்கன் மலாய் டிக்காவை ஹோட்டல்களில் தான் சுவைத்திருப்பீர்கள். ஆனால் அந்த டிக்காவை வீட்டிலேயே எளிமையாக செய்யலாம். குறிப்பாக இதனை வீட்டில் செய்தால் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். அதிலும் ரமலான் நோன்பு காலத்தில் எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடக்கூடாது என்பதால், இது மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும்.

சரி, இப்போது அந்த சிக்கன் மலாய் டிக்காவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத சிக்கன் – 1 கிலோ வெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் மலாய் க்ரீம் – 1 டேபிள் ஸ்பூன் தயிர் – 2 டேபிள் ஸ்பூன் பச்சை ஏலக்காய் – 4 இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன் சீரகப் பொடி – 2 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கியது) எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு துருவிய சீஸ் – 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி நீரை வடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சிக்கனில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி மூடி வைத்து ஊற வைக்க வேண்டும். பின்பு பிளெண்டரில்/மிக்ஸியில் தயிர், இஞ்சி பூண்டு பேஸ்ட், பாதி வெண்ணெய், க்ரீம், சீரகப் பொடி, ஏலக்காய், பச்சை மிளகாய், சீஸ் ஆகியவற்றை போட்டு நன்கு மென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும். பின் அந்த பேஸ்ட்டை சிக்கனுடன் சேர்த்து பிரட்டி 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, க்ரில் கம்பியில் சிக்கன் துண்டுகளை சொருகி, நெருப்பில் காட்டி சுட்டு எடுக்க வேண்டும். அப்படி சுடும் போது வெண்ணெயை அவ்வப்போது தடவி சுட வேண்டும். இப்படி அனைத்து சிக்கன் துண்டுகளையும் சுட்டு எடுத்தால், சிக்கன் மலாய் டிக்கா ரெடி!!!

26 1435306070 chicken malai tikka

Related posts

தந்தூரி சிக்கன் பிரியாணி : செய்முறைகளுடன்…!

nathan

சிக்கன் பிரட்டல்

nathan

ருசியான மொகல் சிக்கன் செய்வது எப்படி

nathan

ஆந்திரா சிக்கன் குழம்பு

nathan

எலுமிச்சை இறால் கிரேவி செய்வது எப்படி

nathan

மீன் மிளகு மசாலா செய்வது எப்படி?

sangika

ஆட்டுக்கால் பாயா | attukal paya

nathan

நண்டு மசாலா

nathan

கடாய் காளான் மசாலா செய்வது எவ்வாறு…?

nathan