32.6 C
Chennai
Monday, Jul 13, 2026
அசைவ வகைகள்

கடாய் பன்னீர் செய்ய வேண்டுமா….

தேவையான பொருட்கள்:

பன்னீர் – 200 கிராம்
வெங்காயம் – 2
தக்காளி – 2
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
தனியா தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்

தாளிக்க தேவையான பொருட்கள்:

எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
கிராம்பு – 4
பட்டை – 1
பூண்டு – 4 பற்கள்
பச்சை மிளகாய் – 2

செய்முறை:

* முதலில் பன்னீரை துண்டுகளாக்கி, சுடுநீரில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின் அதில் வெங்காயத்தைப் போட்டு 5 நிமிடம் வதக்கி, பின் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

* பின் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிய பின் அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து, உப்பு தூவி 1 நிமிடம் கிளறி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து எண்ணெய் தனியாக பிரியும் வரை கொதிக்க விட வேண்டும். அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி, 5 நிமிடம் வேக வைத்து அடுப்பில் இருந்து இறக்கினால், சூடான சுவையான கடாய் பன்னீர் தயார்.

Related posts

ஆ‌ட்டு‌க்க‌றி தொ‌க்கு

nathan

சூப்பரான கேரளா ஸ்டைல் சிக்கன் கட்லெட்

nathan

மஷ்ரூம் ஆம்லெட்

nathan

சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் டிராகன் சிக்கன்

nathan

இறால் பிரியாணி

nathan

சுவையான பாலக் சிக்கன்

nathan

காரசாரமான… குட்டநாடன் மீன் குழம்பு

nathan

சூடான சுவையான சில்லி கார்லிக் சிக்கன் விங்ஸ்!

nathan

மட்டன் க்ரீன் கறி… காரம் தூக்கல்… ருசி அதைவிட தூக்கல்!

nathan