அசைவ வகைகள்

சுவையான உடைத்த முட்டைக் குழம்பு

1 egg curry 1667467306

தேவையான பொருட்கள்:

* முட்டை – 2

* பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்

* புளிச்சாறு – 1/4 கப்

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 1 1/2 டீஸ்பூன்

* கொத்தமல்லி – சிறிது (பொடியாக நறுக்கியது)

* உப்பு – சுவைக்கேற்ப

அரைப்பதற்கு…

* வெங்காயம் – 1 (நறுக்கியது)

* தக்காளி – 2 (நறுக்கியது)

* கடலைப் பருப்பு – 1/2 டேபிள் ஸ்பூன்

* வரமிளகாய் – 2

* தேங்காய் – 1/4 கப்

* சோம்பு – 1/2 டீஸ்பூன்

தாளிப்பதற்கு…

* எண்ணெய் – 3 டீஸ்பூன்

* கடுகு – 1 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

* புதினா – சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

* பின் அதில் கடலைப் பருப்பு, வரமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* பின்பு அதை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் தேங்காய், சோம்பு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.

Udaitha Muttai Kulambu Recipe In Tamil
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதங்கியதும், வெங்காயம், தக்காளி, புதினா ஆகியவற்றை சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து, அத்துடன் மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து 3 நிமிடம் நன்கு வதக்கி, 1 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

* பிறகு அதில் புளிச்சாற்றினை ஊற்ற வேண்டும். பின் அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி, மூடி வைத்து முட்டைகளை வேக வைக்க வேண்டும்.

* முட்டைகள் வேகும் வரை குழம்பை கிளற வேண்டாம். முட்டை வெந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான உடைத்த முட்டைக் குழம்பு தயார்.

Related posts

ரமலான் ஸ்பெஷல் உணவுகள்

nathan

பஞ்சாபி சிக்கன்

nathan

மட்டன் தாழ்ச்சா செய்வது எப்படி!

nathan

காரசாரமான முட்டை குழம்பு செய்முறை விளக்கம்

nathan

சூப்பரான சிக்கன் கஸ்ஸா

nathan

சுவையான மங்களூரியன் சிக்கன் குழம்பு

nathan

சைனீஸ் இறால் நூடுல்ஸ்

nathan

ஆஹா என்ன சுவை! காரைக்குடி நண்டு மசாலா

nathan

ஸ்பெஷல் மட்டன் பிரியாணி செய்வது எப்படி

nathan