30.4 C
Chennai
Thursday, Jul 17, 2025
201606231106210618 how to make samai sambar sadam SECVPF
சைவம்

சாமை சாம்பார் சாதம் செய்வது எப்படி

சிறுதானியங்களை தினமும் உணவில் சேர்த்து வந்தால் நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக வாழலாம்.

சாமை சாம்பார் சாதம் செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

சாமை அரிசி – 4 கப்,
பீன்ஸ், கேரட் – 250 கிராம்,
கத்திரிக்காய், தக்காளி – தலா 50 கிராம்,
காய்ந்த மிளகாய் – 8,
துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு தலா – ஒரு கப்,
சின்ன வெங்காயம் – 10,
முருங்கைக்காய் – 2,
புளி – நெல்லிக்காய் அளவு,
உப்பு, கடுகு, மஞ்சள்தூள், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – தேவையான அளவு,
சாம்பார் பொடி, நெய், சீரகத்தூள், பெருங்காயத்தூள், நல்லெண்ணெய் – சிறிதளவு.

செய்முறை:

* சாமை அரிசியை தண்ணீரில் கழுவி ஊறவைக்கவும்.

* புளியை நன்றாக கரைத்து கொள்ளவும்.

* காய்கறிகள், தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* துவரம் பருப்பை மஞ்சள்தூள் சேர்த்துக் குழைய வேகவிடவும்.

* அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துப் தாளித்த பின், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி, காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.

* காய்கள் நன்கு வெந்ததும், வேகவைத்த பருப்பைச் சேர்த்து, சிறிது புளிக்கரைசலை விட்டுக் கொதிக்கவிடவும்.

* அடுத்து அதில் ஊறவைத்த சாமை அரிசியைக் கொட்டி உப்பு சேர்த்துக் கிளறவும்.

* ஏழரை கப் தண்ணீர் சேர்த்து பெருங்காயத்தூள், சாம்பார் பொடி சேர்த்து நன்கு கிளறவும்.

* அரிசி வெந்தது குழைந்ததும், நெய் ஊற்றிக் கிளறிவிடவும்.

* கடைசியாக கொத்தமல்லித்தழை, சீரகத்தூள் தூவிப் பரிமாறவும்.201606231106210618 how to make samai sambar sadam SECVPF

Related posts

சப்பாத்திக்கு சூப்பரான பன்னீர் குருமா

nathan

சுவையான கத்தரிக்காய் வறுவல் – Brinjal / Eggplant Fry

nathan

மீல் மேக்கர் – பட்டாணி குருமா செய்வது எப்படி

nathan

காளான் மஞ்சூரியன்

nathan

பாகற்காய் சிப்ஸ் செய்வது எப்படி

nathan

வாழைக்காய் பெப்பர் சாப்ஸ்

nathan

கத்தரிக்காய் வதக்கல்

nathan

பச்சைப்பயறு வறுவல்

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான பலாப்பழ வறுவல்

nathan