36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
சைவம்

சூப்பரான சத்தான ஆரஞ்சு – பட்டாணி ரைஸ்

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி சத்து அதிகளவு உள்ளது. இன்று ஆரஞ்சு பழத்தை வைத்து சூப்பரான சத்தான ரைஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சூப்பரான சத்தான ஆரஞ்சு – பட்டாணி ரைஸ்
தேவையான பொருட்கள்

பாசுமதி அரிசி – 2 கப்.
பட்டை, லவங்கம் – 1.
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 3.
பட்டாணி – 1 கப்.
முந்திரிப் பருப்பு – 6.
திராட்சை – 4.
ஆரஞ்சு சாறு – 2 கப்.
நெய் – 2 ஸ்பூன்.

செய்முறை:

* பாசுமதி அரிசியை நன்றாக கழுவி கொள்ளவும்.

* கழுவிய பாசுமதி அரிசியை ஆரஞ்சு சாறு, தண்ணீர் சேர்த்து அரை மணி நேரம் ஊறவிடவும்.

* ஒரு பிரஷர் குக்கரில், ஊறவைத்த அரிசியை உப்பு சேர்த்து இரண்டு விசில் வந்தவுடன் இறக்கி தனியாக வைக்கவும்.

* ஒரு வாணலியில் நெய் விட்டு, பட்டை, லவங்கம் போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

* பிறகு உப்பு, பட்டாணி சேர்த்து கிளறவும்.

* பட்டாணி வெந்தவுடன் வேக வைத்த சாதத்தை சேர்த்து கிளறி இறக்கவும்.

* அதில் முந்திரிப்பருப்பு, திராட்சை சேர்த்து பரிமாறவும்.

* சூப்பரான சத்தான ஆரஞ்சு – பட்டாணி ரைஸ் ரெடி.

Related posts

தக்காளி – புதினா புலாவ்

nathan

கப்பக்கறி

nathan

சுவையான புளியோதரை செய்வது எப்படி

nathan

சிம்பிளான… வெஜிடேபிள் தம் பிரியாணி

nathan

மீல் மேக்கர் குருமா செய்வது எப்படி என்பதை பார்ப்போம்…

nathan

பச்சைப்பயறு வறுவல்

nathan

தக்காளி குழம்பு

nathan

வரகரிசி தக்காளி சாதம்

nathan

பொங்கல் ஸ்பெஷல்: கதம்ப சாம்பார்

nathan