32.6 C
Chennai
Friday, Jul 17, 2026
சைவம்

சூப்பரான வெந்தய மசாலா சாதம்

ஆந்திராவில் இந்த வெந்தய மசாலா சாதம் மிகவும் பிரபலம். ஸ்பைசியாக சூப்பராக இருக்கும். இந்த சாதத்தை எப்படி செய்வது என்று விரிவாக பார்க்கலாம்.

சூப்பரான வெந்தய மசாலா சாதம்
தேவையான பொருட்கள் :

அரிசி – 300 கிராம்
வெந்தயம் – 2 டீஸ்பூன்
கீறிய பச்சை மிளகாய் – 2
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 3
பூண்டு – 10 பல்
சின்ன வெங்காயம் – 15
சோம்பு – ஒரு டீஸ்பூன்
தேங்காய் – ஒரு மூடி
சாம்பார் பொடி – ஒரு டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – சிறிதளவு
மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 4 டீஸ்பூன்

செய்முறை :

* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* அரிசியை நன்றாக கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும்.

* தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும்.

* சின்ன வெங்காயத்தை ஒன்றிரண்டாகத் தட்டி வைக்கவும்.

* அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்துத் தாளிக்கவும்.

* பிறகு சோம்பு சேர்த்து பொரிந்ததும் வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

* தக்காளி நன்றாக வெந்ததும் சின்ன வெங்காயம் சேர்த்து சுருள வரும் வரை வதக்கவும்.

* இத்துடன் சாம்பார் பொடி, மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மசாலா வாசனை போகும் வரை வதக்கவும்.

* இத்துடன் தேங்காய்ப்பால் மற்றும் தண்ணீரை சமஅளவில் சேர்த்து ஊற்றவும்.

* கொதி வந்தவுடன் ஊறவைத்த அரிசியைச் சேர்த்து வேக விடவும். அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். வெந்ததும் எடுத்துப் பரிமாறவும்.

* சூப்பரான வெந்தய மசாலா சாதம் ரெடி.

Related posts

ப்ராக்கோலி சால்ட் அண்ட் பெப்பர் ரெசிபி

nathan

குடைமிளகாய், மிளகு, காளான் துவட்டல்

nathan

பாலக்கீரை காளான் பிரட் டோஸ்ட்!

nathan

சுவையான குடைமிளகாய் காளான் மிளகு வறுவல்

nathan

பட்டாணி புலாவ்

nathan

கத்தரிக்காய் – முருங்கைக்காய் சாப்ஸ் செய்யும் முறைகள்

nathan

தேங்காய்ப் பால் சாதம்

nathan

சுவையான சத்தான பன்னீர் சாதம்

nathan

பஞ்சாப் உருளைக்கிழங்கு

nathan