31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கியம் குறிப்புகள்

அதிகாலையில் எழுவதில் என்ன நன்மைகள்

அதிகாலையில் எழுவதில் அப்படி என்ன நன்மைகள் இருக்கின்றன என்று தெரியுமா?

அதிகாலையில் எழுவதில் என்ன நன்மைகள்
அதிகாலையில் எழும்படி நம் வீடுகளில் பெரியவர்கள் கத்திக்கொண்டே இருப்பார்கள். ஆனால் பலருக்கு அதுதான் உலக மகா கஷ்டமான காரியம். சரி, அதிகாலையில் எழுவதில் அப்படி என்ன நன்மைகள் இருக்கின்றன என்று தெரியுமா?

அதிகாலையில் மூளை நரம்பு இயக்கங்கள் சீராகச் செயல்படும். மூளை சுறுசுறுப்பாக இயங்கும். இதனால், தன்னம்பிக்கையும் உற்சாகமும் அதிகரிக்கும்.

காலையில் தூய்மையான காற்றைச் சுவாசிப்பதால், நுரையீரல் வலுவடையும். ஆஸ்துமா, சைனஸ் போன்ற பிரச்சினைகள் நெருங்காது. அதிகாலையில் மூச்சுப் பயிற்சி, யோகா செய்வது, உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் நலம் பயக்கும்.

அதிகாலையில் எழுவதால் மன அழுத்தம் குறையும். அன்றைய நாளில் என்னென்ன வேலைகள் இருக்கின்றன, அவற்றில் எவற்றை, எப்போது, எங்கே, எப்படி முடிப்பது என எளிதாகத் திட்டமிட முடியும்.

உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்க முடியும். காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்யும்போது, அதிக ஈடுபாட்டுடன் சிறப்பாகச் செய்ய முடியும். அதிகாலை எழுவதால், காலை வேளையில் கபகபவென்று பசி எடுக்கும். காலை ஆகாரத்தை தவறவிடாமல் இருப்பதால், உடல் பருமன், சர்க்கரைநோய் அபாயம் குறையும்.

இரவு 9 மணிக்கெல்லாம் உறக்கம் தானாக வர ஆரம்பிக்கும். இரவு சரியான நேரத்துக்குத் தூங்குவதால், மன அழுத்தம், ரத்த அழுத்தம் வராது. வளர்சிதை மாற்றம் சீராக இருக்கும்.

அதிகாலை எழுவதால் சரியான நேரத்தில் இயற்கைக் கடனைக்கழிக்க முடியும். அது, உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற உதவும். நச்சுக்கள் சீராக வெளியேறுவதால் சிறுநீர், கல்லீரல், பெருங்குடல் போன்ற உறுப்புகள் சீராக இயங்கும்.

உடல்நலனுக்கு மட்டுமல்ல, மனநலனுக்கும் அதிகாலையில் எழுவது சிறந்தது. எனவே, அதிகாலையில் எழும் பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக வழக்கமாக்கிக் கொள்வோம்.

Related posts

தண்ணீரை சேமித்து வைக்க நீங்கள் பிளாஸ்டிக் மற்றும் எவர் சில்வரை பயன்படுத்துவது சரியா?

nathan

“எலுமிச்சை சாறுடன் தேன் குடிப்பது நல்லதா’

nathan

மிளகு தண்ணீரை குடிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்…

nathan

கர்ப்பப்பை தொடர்பான வியாதிகள், பாதிப்புகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

nathan

தெரிந்துகொள்வோமா? மிகப்பெரிய பாதிப்புக்கள் அஜினமோட்டோ ஏற்படுத்தும்

nathan

பெண்களுக்கான பதிவு : பருவ வயதை அடைந்த பெண்கள் மற்றும் டீனேஜ் பெண்களை பாதிக்கும் மிகவும் பொதுவான பிரச்சினை யோனியில் இருந்து வெளியேறும் துர்நாற்றம்.

nathan

ஆண் குழந்தை பிரசவ வலி அறிகுறிகள்

nathan

வீட்டில் கற்றாழை ஜெல் தயாரிப்பது எப்படி?

nathan

நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்களுக்கு மனஅழுத்தத்தை அதிகம் ஏற்படுத்துமாம்!

nathan