27.9 C
Chennai
Monday, Nov 18, 2024
poooriiii
சிற்றுண்டி வகைகள்

பூரண பூரி : செய்முறைகளுடன்…!

தேவையான பொருட்கள் :

மேல் மாவுக்கு:
மைதா – ஒரு கோப்பை
சோடா மாவு – 2 சிட்டிகை
உப்பு – சிறிதளவு
வெண்ணெய் – சிறிதளவு
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி (மாவு பிசைய)
ஜீரா தயாரிக்க :
சர்க்கரை – ஒரு கோப்பை
தண்ணீர் – முக்கால் கோப்பை
பூரணம் தயாரிக்க:
தேங்காய் – நடுத்தர அளவில் முழு தேங்காய்
சர்க்கரை – 5 மேசைக்கரண்டி
ஏலக்காய் – 5
பொரிக்க :
எண்ணெய்
செய்முறை :
தேங்காயை பூப்போல ஒரே சீராக துருவி வைத்துக் கொள்ளவும். ஏலக்காயை தோல் நீக்கி விதையை மட்டும் பொடித்து வைத்துக் கொள்ளவும்.

மைதாவில் உப்பு, சோடா மாவு, வெண்ணெய், எண்ணெய் சேர்த்து நன்றாக பிசைந்து ஒரு 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

வெறும் வாணலியை சூடாக்கி அதில் தேங்காயை ஈரம் போக வதக்கவும்.

பின்பு அதில் சர்க்கரையை சேர்த்து, அதன் பின் ஏலக்காய் தூளை சேர்த்து இறக்கி ஆற வைக்கவும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சர்க்கரையையும், தண்ணீரையும் சேர்த்து பாகு பதத்திற்கு காய்ச்சி இறக்கி வைக்கவும்.

ஊற வைத்த மைதாவை பூரிக்கு இடுவது போல கொஞ்சம் கனமாக தேய்த்து அதில் தயாரித்து வைத்த பூரணத்தை வைத்து சோமாசுக்கு மடிப்பதை போல ஓரங்களை நன்றாக அழுத்தி விட்டு மடிக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி, பிறகு எண்ணெய் காய்ந்ததும் தயாரித்து வைத்த பூர்ண பூரிகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

பொரித்து வைத்த பூரிகளை சர்க்கரை பாகில் போட்டு 45 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

பிறகு தட்டுகளில் தனியாக எடுத்து வைத்து முந்திரி, பிஸ்தா, பாதாம் தூவி அலங்கரித்து பரிமாறவும்.poooriiii

Related posts

ஃபலாஃபெல்

nathan

சுவையான மீன் கட்லெட்

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் பானிபூரி சாட்

nathan

பிரெட் ஸ்விஸ் ரோல்

nathan

ப்ராங்கி ரோல்

nathan

பொங்கல் ஸ்பெஷல்: பால் பொங்கல்

nathan

ஹைதராபாத் ஸ்பெஷல் ஆனியன் சோட்டா சமோசா

nathan

பனீர் குழிப்பணியாரம்

nathan

சத்தான சுவையான வெந்தயக்கீரை தோசை

nathan