27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
201606090836243529 how to make mor kulambu SECVPF
சைவம்

சிம்பிளான மோர் குழம்பு செய்வது எப்படி tamil samayal

மோர் உடலுக்கு மிகவும் குளிர்ச்சியானது. இங்கு மோர் குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சிம்பிளான மோர் குழம்பு செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

மோர் – 1 கப்
தேங்காய் – சிறிதளவு
தனியா – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
கடுகு – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
வரமிளகாய் – 1
தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய், தனியா, சீரகம், மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியில் மோரை ஊற்றி அடுப்பில் வைத்து சூடேற்றி, பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி, தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

* பின் மிதமான தீயில் அதனை 3 நிமிடம் மட்டும் கொதிக்க விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

* மற்றொரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித் து, குழம்புடன் சேர்த்து கிளறினால், சிம்பிளான மோர் குழம்பு ரெடி!!!201606090836243529 how to make mor kulambu SECVPF

Related posts

பொடி பொடிச்ச புளிங்கறி

nathan

இஞ்சி குழம்பு

nathan

சூப்பரான வெண்டைக்காய் மோர் குழம்பு

nathan

பருப்பு உருண்டை குழம்பு செய்வது எப்படி

nathan

பட்டாணி பன்னீர் கிரேவி

nathan

பூண்டு – மிளகுக் குழம்பு

nathan

மிளகு மோர்க்குழம்பு செய்வது எப்படி

nathan

முருங்கைக்காய் கூட்டுச்சாறு

nathan

சோயா மட்டர் புலாவ்|soya matar pulao recipe in tamil

nathan