36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
சைவம்

காலிபிளவர் பொரியல்

தேவையானவை:

காலிபிளவர் – 1
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – சிறிதளவு

தாளிக்க:

நல்லெண்ணெய் – 1 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல் – 1
சீரகம் – 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 1 இணுக்கு

செய்முறை:

• காலிபிளவரைச் பத்து நிமிடங்கள் சுடுநீரில் ஊறவைக்கவும் (கண்ணுக்குத் தெரியாத பூச்சி, புழுக்கள் அழிந்து விடும்)

• காலிபிளவரைச் சிறிது துடைத்து விட்டுப் பிடித்த வடிவங்களில் (பெரிதாகவோ, பொடிதாகவோ) நறுக்கவும்.

• வாணலியில் தாளிசப் பொருட்களைத் தாளித்துக் கொண்டு நறுக்கின காலிபிளவரையும் உப்பு, மஞ்சள் தூளையும் சேர்த்து தண்ணீர் தெளித்து மூடி விட்டு வேக விடவும். (அதிகத் தண்ணீர் விட்டால் கணிசம் குறையும், குழைந்தும் விடும்.)

• காய் வெந்ததும் சாம்பார்த்தூளைக் காரத்திற்குச் சேர்த்து ஒரு தேக்கரண்டி எண்ணெயிட்டுக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.

• சப்பாத்தி, சாம்பார், வத்தக்குழம்பு, ரசம் போன்றவற்றிற்கு அருமையான பொரியல்.

• மஞ்சள் தூள் சேர்ப்பது கண்ணுக்குத் தெரியாத புழுக்களை அழித்து உடலிற்கு நன்மை சேர்க்கும் என்பதாலாகும்.

• பொரியலாக மட்டுமில்லாமல் சாம்பார், குருமா, தால், பரோத்தா வகைகளிலும் காலிபிளவரைப் பயன்படுத்தி உடலிற்குச் சத்துக்களைச் சேர்க்க வேண்டும்.

Related posts

கொத்தமல்லி பட்டாணி சாதம் செய்வது எப்படி

nathan

சௌ சௌ ரெய்தா

nathan

சூப்பரான மசாலா வடை குழம்பு

nathan

மஷ்ரூம் புலாவ்

nathan

உருளைக்கிழங்கு பீன்ஸ் பொரியல்

nathan

ராஜஸ்தானி வெண்டைக்காய் ஃப்ரை

nathan

தேங்காய்ப்பால் குழம்பு,சமையல்,TamilCook, Indian Cooking Recipes in Tamil and English

nathan

பூசணிக்காய் பால் கூட்டு

nathan

ப்ரோக்கோலி பொரியல்

nathan