Bd6wb4Q
சிற்றுண்டி வகைகள்

முள்ளங்கி புரோட்டா

என்னென்ன தேவை?

கோதுமை மாவு – 1 கப்,
முள்ளங்கித்துருவல் – 1 கப்,
சீரகம் – 1/4 டீஸ்பூன்,
கடலை மாவு – 1 டேபிள்ஸ்பூன்,
கரம்மசாலா – 1/4 டீஸ்பூன்,
மிளகாய்தூள் – 1/4 டீஸ்பூன்,
வெங்காயம் – 1,
கொத்தமல்லி – சிறிது,
உப்பு- தேவைக்கு,
எண்ணெய் – 3 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

முள்ளங்கித்துருவலில் இருந்து தண்ணீரை பிழிந்து விடவும். இந்த தண்ணீரை மாவு பிசைய உபயோகிக்கவும். கோதுமை மாவில் உப்பு போட்டு மிருதுவாக பிசைந்து கொள்ளவும். கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். பின் துருவிய முள்ளங்கி, கடலைமாவு, உப்பு, கரம் மசாலா, மிளகாய் தூள் சேர்க்கவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். இந்தக் கலவையை நன்கு ஆற விடவும். கோதுமை மாவை ஒரு பெரிய உருண்டை எடுத்து சிறிய சப்பாத்தியாக இட்டு முள்ளங்கி கலவையை இதன் நடுவில் வைத்து மூடவும். இதை சற்றே பெரிய புரோட்டாவாக இட்டு தோசைக்கல்லில் இரண்டுபுறமும் போட்டு சிறிது எண்ணெய் விட்டு எடுக்கவும். ஊறுகாய், தயிருடன் பரிமாறவும்.
Bd6wb4Q

Related posts

சூப்பரான இறால் பஜ்ஜி முயன்று பாருங்கள்…

sangika

மரவள்ளிக்கிழங்கு உருண்டை

nathan

உருளைக்கிழங்கு ரோல்

nathan

சுவையான மினி ரவை ஊத்தாப்பம்

nathan

ஃபிஷ் ரோல் செய்ய தெரியுமா…?

nathan

சிறுதானிய கார குழிப்பணியாரம் செய்முறை விளக்கம்

nathan

சுவையான உருளைக்கிழங்கு வடை

nathan

சுவையான சத்தான கோதுமை ரவை பொங்கல்

nathan

மட்டன் போண்டா

nathan