27.7 C
Chennai
Tuesday, Jul 22, 2025
201605240702017270 how to make bajra curd rice SECVPF
சைவம்

கம்பு தயிர்சாதம் செய்வது எப்படி

சுவையான சத்தான கம்பு தயிர் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

கம்பு தயிர்சாதம் செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

கம்பு – 1/4 கோப்பை
சின்ன வெங்காயம் – 5 அல்லது (பெரிய வெங்காயம் – சிறிது 1 )
ப.மிளகாய் – 1
தயிர் – தே.அ
உப்பு – தே. அ

தாளிக்க வேண்டியவை :

எண்ணெய் – 1/2 தே.க
கடுகு – 1/4 தே.க
காய்ந்த மிளகாய் – 1
பெருங்காய துள் – சிறிது
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை :

* வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கம்பை கழுவி விட்டு 15 முதல் 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். (நேரம் கூட ஊறினால் பரவாயில்லை). தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸியில் கொரகொரப்பாக உடைத்துக் கொள்ளவும்.

* அரைத்த கம்புடன் 1 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து + ப.மிளகாய் + வெங்காயம் சேர்த்து மைக்ரோவேயில் 6 நிமிடங்கள் வைக்கவும். நடுநடுவே கிளறிவிடவும்.

* வாணலியில் கொதிக்கவிட 10 நிமிடங்களில் வெந்து விடும்.

* சூடு ஆறிய பின் தயிர் + உப்பு சேர்த்து கலக்கவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து தயிர் சாதத்தில் கலந்து பரிமாறவும்.

* சுவையான சத்தான கம்பு தயிர் சாதம் ரெடி.

201605240702017270 how to make bajra curd rice SECVPF

Related posts

கசப்பில்லாத பாகற்காய் சாம்பார் செய்வது எப்படி

nathan

சுவையான ரவா புட்டு செய்வது எப்படி?

nathan

சத்தான கேரட் – பாசிப்பருப்பு கூட்டு

nathan

கலவை காய்கறி மசாலா

nathan

புளிச்ச கீரை புளியோதரை

nathan

தந்தூரி மஷ்ரூம்

nathan

செட்டிநாடு பன்னீர் மசாலா

nathan

சென்னா பன்னீர் கிரேவி

nathan

கொத்தமல்லி புலாவ்

nathan