31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
சைவம்

கோவைக்காய் அவியல்

தேவையானப்பொருட்கள்:

கோவக்காய் – 10 முதல் 15 வரை
மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன்
தேங்காய் துருவல் – 3 முதல் 4 டேபிள்ஸ்பூன் வரை
சீரகம் – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 அல்லது 3
தயிர் – 1/2 கப்
தேங்காய் எண்ணை – 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

கோவக்காயை கழுவி விட்டு, நீள வாக்கில் 4 அல்லது 5 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, நன்றாக பிசறி வைக்கவும்.

தேங்காய் துருவல், சீரகம், பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு, 1 அல்லது 2 டேபிள்ஸ்பூன் தயிரையும் சேர்த்து, சற்று கொரகொரப்பாக அரைத்துதெடுக்கவும்.

ஒரு வாணலியை அடுப்பிலேற்றி, ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணை விட்டு காய்ந்ததும் அதில் கோவக்காய் துண்டுகளைப் போட்டு, 2 அல்ல்து 3 நிமிடங்கள் வரை வதக்கவும். பின்னர் அதில் ஒரு கை நீரைத் தெளித்துக் கிளறி விட்டு, மூடி வைத்து, மிதமான தீயில் வேக விடவும். காய் முக்கால் பங்கு வெந்தால் போதும், மூடியைத் த்றந்து, காயின் மேல் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைப் போடவும். (இப்பொழுது கிளற வேண்டாம்). அப்படியே மூடி வைத்து மேலும் 2 நிமிடங்கள் வேக விடவும். பின்னர் மூடியைத் திறந்து, கிளறி விட்டு, அதில் மீதமுள்ள தேங்காய் எண்ணையை ஊற்றி, கறிவேப்பிலையயும் சேர்த்துக் கிளறவும் கடைசியில், தயிரை நன்றாகக் கடைந்து, காயில் ஊற்றிக் கிளறி, உடனே இறக்கி வைக்கவும்.

Related posts

வாழைக்காய் சட்னி

nathan

வெந்தயக்கீரை சாம்பார்

nathan

பரோட்டா!

nathan

பெப்பர் உருளைக்கிழங்கு ரோஸ்ட்

nathan

முட்டைகோஸ் – பட்டாணி சாதம்

nathan

கேரட் தால்

nathan

சூப்பரான கொண்டைக்கடலை குருமா

nathan

சுவையான கொண்டைக்கடலை புலாவ்

nathan

தயிர்சாதம் & ஃப்ரூட்

nathan