30.5 C
Chennai
Friday, May 17, 2024
10
சிற்றுண்டி வகைகள்

டிரை கிரெய்ன் ரொட்டி & பரங்கிக்க்காய் அடை! ஈஸி 2 குக்!!

ஈஸி 2 குக்
உணவு

10
டிரை கிரெய்ன் ரொட்டி

தேவையானவை

ராகி மாவு, தினை மாவு, கோதுமை மாவு, கேரட் துருவல், பொடியாக நறுக்கிய வெங்காயம் – தலா 1 கப், கொத்தமல்லி – அரை கப் வறுத்து, பாதியாகப் பொடித்த வேர்க்கடலை – கால் கப், பச்சைமிளகாய் விழுது, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை

ஒரு பாத்திரத்தில், ராகி, தினை, கோதுமை மாவைக் கொட்டி, துருவிய கேரட், வெங்காயம், கொத்தமல்லி, பச்சைமிளகாய் விழுது, உப்பு, வேர்க்கடலை ஆகியவற்றைச் சேர்த்து, வெதுவெதுப்பான நீர் கலந்து, சப்பாத்தி மாவைவிட லூஸாகப் பிசைய வேண்டும். தவாவில் அடைபோல, கையால் ரொட்டியைத் தட்டும் அளவுக்கு மாவைப் பிசைந்துகொள்ள வேண்டும்.

வாழை இலையில் எண்ணெய் தடவி, மாவு உருண்டையை எடுத்து, மெல்லியதாகத் தட்டி, சூடான தவாவில் வாழை இலையோடு அப்படியே கவிழ்த்துவிட வேண்டும். பொறுமையாக வாழை இலையை எடுத்துவிடலாம். எண்ணெய் ஊற்றத் தேவை இல்லை. ஏனெனில், வாழை இலையில் இருந்த எண்ணெயே போதுமானது. இதற்குத் தேங்காய் சட்னி பொருத்தமாக இருக்கும்.

பலன்கள்

11

நார்ச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளன.

வைட்டமின் சி, ஏ, இரும்புச்சத்து, கால்சியம் இருப்பதால் பெண்கள், குழந்தைகள், வயதானவர்களுக்கு சிறந்த ஊட்டச்சத்து உணவாக அமையும். எலும்புகள் உறுதியடையும்.

சுவையான ரொட்டியாக இருக்கும் மதிய உணவாக குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். வாழை இலையில் உள்ள ஸ்டார்ச் சத்தும் இதில் கிடைத்துவிடும்.

பரங்கிக்க்காய் அடை

தேவையானவை

பச்சரிசி – 2 கப், கடலைப் பருப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், மஞ்சள் பரங்கிக்காய் துருவியது – தலா 1 கப், பச்சைமிளகாய், சிவப்பு மிளகாய் – தலா 3, கொத்தமல்லி, கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

12

செய்முறை

அரிசி, பருப்பு இரண்டையும் தனித் தனியாக ஊறவைக்க வேண்டும். பருப்பை சிறிது முன்கூட்டியே ஊறவைத்துவிட வேண்டும். ஏனெனில், கடலைப் பருப்பு ஊற, சிறிது நேரம் ஆகும். நன்கு ஊறியதும், இரண்டையும் ஒன்றாகக் கலந்து கொர கொரவென்று அரைக்க வேண்டும். சிவப்பு மற்றும் பச்சை மிளகாயை ஊறவைத்து தனியாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

அரைத்த மாவில் தேவையான மிளகாய் விழுது, உப்பு, வெங்காயம், பரங்கிக்காய், கறிவேப்பிலை, கொத்தமல்லியைக் கலக்க வேண்டும். தோசை செய்வதுபோல கொஞ்சம் திக்காக அடைபோல தவாவில் சுட்டு எடுக்கலாம். இதற்கு வெங்காயம் அல்லது தக்காளிச் சட்னி பொருத்தமாக இருக்கும்.

பலன்கள்

ஆன்டிஆக்ஸிடன்ட், வைட்டமின் சி, தாதுஉப்புக்கள், வைட்டமின்கள் நிறைந்துள்ளன.

பரங்கிக்காயைச் சாப்பிடாதவர்களும் இந்த அடையை விரும்பிச் சாப்பிடுவர். சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்த நோயாளிகளுக்கு ஏற்ற சத்தான உணவு.

உடல் எடையைச் சீராகப் பராமரிக்க உதவும். அதே சமயம், சீக்கிரமே பசிக்காது. திடமான காலை உணவாக அமையும்.

வைட்டமின் சி, ஏ, புரதச்சத்து நிறைந்துள்ளதால், காலை உணவாகச் சாப்பிட ஏற்றது.

Related posts

கொய்யா இனிப்பு வடை

nathan

தயிர் மசாலா இட்லி

nathan

ரவா நிம்மபண்டு புளிஹோரா

nathan

சீப்பு சீடை: தீபாவளி ஸ்பெஷல்

nathan

பாசிப்பருப்பு தோசை

nathan

சத்தான சுவையான கோதுமை காக்ரா

nathan

சேமியா பொங்கல்

nathan

சத்தான சுவையான பருப்புத் துவையல்

nathan

பால் அடை பிரதமன்

nathan