25.9 C
Chennai
Saturday, Mar 14, 2026
%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D %E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88
சிற்றுண்டி வகைகள்

வெஜிடபிள் உருண்டை

தேவையான பொருட்கள்:
அரிசி – 2 கப்,
கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி – தலா ஒரு கப்,
வெங்காயம் – 1,
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு,
தேங்காய் துருவல் – கால் கப்,
காய்ந்த மிளகாய் – 3,
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை,
கடுகு – அரை டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு ஸ்பூன்,
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

• அரிசியை மிக்ஸியில் ரவை போல உடைத்து வைக்கவும்.
• வெங்காயம், கொத்தமல்லி, கேரட், பீன்சை பொடியாக நறுக்கி வைக்கவும்.
• கடாயில் எண்ணெய் விட்டு. கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளித்து. பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
• பிறகு, கேரட், பீன்ஸ் சேர்த்து, பச்சைப் பட்டாணியையும் சேர்த்து வதக்கி, ஒரு கப் அரிசிக்கு இரண்டரை கப் என்ற அளவில் தண்ணீர் விட்டு சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
• இதில் தேங்காய் துருவல், அரிசி ரவை, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி, ஆறியதும் சின்ன உருண்டைகளாக செய்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
• இப்போது சுவையான சத்தான வெஜிடபிள் உருண்டை ரெடி.

%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D %E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88

Related posts

மாலை நேர ஸ்நாக்ஸ் ஃபிங்கர் சிக்கன்

nathan

சுவையான பட்டாணி தோசை

nathan

சீஸ் போண்டா

nathan

குழந்தைகளுக்கான பேபி கார்ன் புலாவ்

nathan

அதிரசம்

nathan

சன்டே ஸ்பெஷல் சிக்கன் உருளைக்கிழங்கு கட்லெட்

nathan

சத்தான சுவையான கேழ்வரகு டோக்ளா

nathan

சுவையான சத்தான வேர்க்கடலை தயிர் பச்சடி

nathan

காளான் கபாப்

nathan