சுண்டைக்காய் வத்தக் குழம்பு
ஆரோக்கிய உணவு OG

sundakkai vatha kuzhambu – சுண்டைக்காய் வத்தக் குழம்பு

தேவையான பொருட்கள்:

சுண்டைக்காய் வத்தல் – 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 1 (நறுக்கியது)
பூண்டு – 10 பற்கள்
புளிச்சாறு – 1 கப்
கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

மசாலாவிற்கு…

மல்லி – 2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் – 10
உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
அரிசி – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
பூண்டு – 6 பற்கள்

சுண்டைக்காய் வத்தக் குழம்பு
சுண்டைக்காய் வத்தக் குழம்பு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை மற்றும் பூண்டு சேர்த்து வதக்கி, பின் வெங்காயத்தை சேர்த்து 1 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

பின்பு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து 3 நிமிடம் வதக்கி, பின் அதில் புளிச்சாறு சேர்த்து கிளறி, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மிதமான தீயில் 10-15 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

அதே சமயம் மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி சீரகம், கடுகு மற்றும் சுண்டைக்காய் சேர்த்து தாளித்து, பின் இதனை குழம்புடன் சேர்த்து, மீண்டும் 10 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட்டு இறக்கினால், சுண்டைக்காய் வத்தக் குழம்பு ரெடி!!!

Related posts

ஆட்டு மண்ணீரல் தீமைகள்

nathan

எடமேம்: ஊட்டச்சத்தின் ஒரு பொக்கிஷம்

nathan

broad beans in tamil -ஃபாவா பீன்ஸ்

nathan

சர்க்கரை நோய் சாப்பிட கூடாதவை

nathan

பழங்கள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

nathan

கருப்பு அரிசியில் கொட்டிக் கிடக்கும் நன்மைகள் -’மாரடைப்பு பயம் வேண்டாம்’

nathan

walnut in tamil : ஆரோக்கியமான இதயத்திற்கான ரகசியம்

nathan

ஆளி விதை எண்ணெய் பயன்பாடு

nathan

Pearl Millet Benefits in Tamil | முத்து தினை நன்மைகள்

nathan