சுண்டைக்காய் வத்தக் குழம்பு
ஆரோக்கிய உணவு OG

sundakkai vatha kuzhambu – சுண்டைக்காய் வத்தக் குழம்பு

தேவையான பொருட்கள்:

சுண்டைக்காய் வத்தல் – 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 1 (நறுக்கியது)
பூண்டு – 10 பற்கள்
புளிச்சாறு – 1 கப்
கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

மசாலாவிற்கு…

மல்லி – 2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் – 10
உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
அரிசி – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
பூண்டு – 6 பற்கள்

சுண்டைக்காய் வத்தக் குழம்பு
சுண்டைக்காய் வத்தக் குழம்பு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை மற்றும் பூண்டு சேர்த்து வதக்கி, பின் வெங்காயத்தை சேர்த்து 1 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

பின்பு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து 3 நிமிடம் வதக்கி, பின் அதில் புளிச்சாறு சேர்த்து கிளறி, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மிதமான தீயில் 10-15 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

அதே சமயம் மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி சீரகம், கடுகு மற்றும் சுண்டைக்காய் சேர்த்து தாளித்து, பின் இதனை குழம்புடன் சேர்த்து, மீண்டும் 10 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட்டு இறக்கினால், சுண்டைக்காய் வத்தக் குழம்பு ரெடி!!!

Related posts

கருஞ்சீரகத்தின் பலன்கள்: karunjeeragam benefits in tamil

nathan

ஏபிசி ஜூஸின் பக்க விளைவு – abc juice side effects

nathan

nutritional facts of a banana : உங்கள் ஆரோக்கியத்தையும் ஆற்றலையும் அதிகரிக்க ஒரு சுவையான வழி

nathan

மசூர் பருப்பு: masoor dal in tamil

nathan

ஸ்பைருலினா நன்மைகள்: spirulina benefits in tamil

nathan

உலர்ந்த இறால் கருவாடு: ஒரு சத்தான மற்றும் பல்துறை மூலப்பொருள்

nathan

ஆரோக்கிய நன்மைகளை தரும் பச்சை பீன்ஸ்

nathan

கர்ப்பிணி பெண்கள் கருப்பு திராட்சை சாப்பிடலாமா

nathan

கொட்டைகளின் நன்மைகள்: nuts benefits in tamil

nathan