28.1 C
Chennai
Sunday, Nov 17, 2024
2 white kurma 1658412665
சமையல் குறிப்புகள்

வெள்ளை குருமா – white kurma

white kurma

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* பிரியாணி இலை – 1

* பட்டை – 1 இன்ச்

* ஏலக்காய் – 2

* கிராம்பு – 1

* சோம்பு – 1 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

* இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்

* வெங்காயம் – 1 (நறுக்கியது)

* காய்கறிகள் – 1 கப் (கேரட், பீன்ஸ், பட்டாணி, காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு)

* கொத்தமல்லி – சிறிது

* உப்பு – சுவைக்கேற்ப

* தண்ணீர் – தேவையான அளவு

அரைப்பதற்கு…

* துருவிய தேங்காய் – 1 கப்

* பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன்

* முந்திரி – 4-5

* சோம்பு – 1 டீஸ்பூன்

* சீரகம் – 1 டீஸ்பூன்

* பச்சை மிளகாய் – 4-5

* கிராம்பு – 1

* ஏலக்காய் – 2

* பட்டை – 1

* தண்ணீர் – தேவையான அளவு

2 white kurma 1658412665

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள தேங்காய், பொட்டுக்கடலை, சீரகம், சோம்பு, முந்திரி, கிராம்பு, ஏலக்காய், பட்டை, பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு, தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.

White Kurma Recipe In Tamil
* பின்னர் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

* பின்பு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கி, காய்கறிகளை சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

* காய்கறிகள் ஓரளவு வெந்ததும், அதில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் தேவையான அளவு நீரை ஊற்றி, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.

* விசில் போனதும் குக்கரைத் திறந்து, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான வெள்ளை குருமா தயார்.

Related posts

வாழைப்பழத்தை கொண்டு தயாரிக்கப்படும் டீ பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது….

sangika

என் சமையலறையில்!

nathan

KONDAKKADALAI SUNDAL/ கொண்டைக்கடலை சுண்டல்

nathan

சுவையான ஆந்திரா ஸ்டைல் பெப்பர் சிக்கன்

nathan

மழைக்கால குட்டி பசியை போக்க பனீர் பஜ்ஜி!…

sangika

காய்கறிகள் நிறைந்த ரொட்டி வடை செய்வது எப்படி?

nathan

இறால் கிரேவி

nathan

தொண்டை வலி ? உடனடி நிவாரணத்திற்கு இந்த 10 எளிய வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கவும்

nathan

சுவையான கொங்குநாடு மட்டன் குழம்பு

nathan