201605090925514516 Increase body heat to eat papaya SECVPF
ஆரோக்கிய உணவு

பப்பாளி சாப்பிட்டால் உடல் சூடு அதிகரிக்குமா?

அப்பழத்தை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் பல உடல் நல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

பப்பாளி சாப்பிட்டால் உடல் சூடு அதிகரிக்குமா?
பப்பாளியில் ஏராளமான சத்துக்கள் உள்ளது. இதனால் அப்பழத்தை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் பல உடல் நல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

ஆனால் சிலர் பப்பாளி சாப்பிட்டால் உடல் சூடு அதிகரிக்கும் என்று கூறுகின்றனர். அது உண்மையா இல்லையா என்று யாருக்கும் சரியாக தெரியாது. இருப்பினும் அதை நம்பிக் கொண்டு நிறைய மக்கள் பப்பாளி சாப்பிடுவதை தவிர்க்கின்றனர்.

உண்மையிலேயே பப்பாளி உடல் சூட்டை அதிகரிக்குமா என்பதையும், பப்பாளியை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்றும் பார்க்கலாம்.

பப்பாளியில் வைட்டமின்கள், புரோட்டீன்கள், கார்போஹைட்ரேட்டுகள் போன்றவை இருப்பதோடு, கனிமச்சத்துக்களான கால்சியம், மக்னீசியம், இரும்புச்சத்து மற்றும் பல அதிகமாக உள்ளன.

மற்ற பழங்களை விட ஏராளமான சத்துக்களை பப்பாளி உள்ளடக்கி இருப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் இதனை ஒரே சமயத்தில் அளவுக்கு அதிகமாக ஒருவர் எடுத்தால் தான், உடல் வெப்பம் அதிகரிக்கும் என்றும் கூறுகின்றனர்.

இதற்கு காரணமாக, பப்பாளியில் உள்ள ஒருசில ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலினுள் அளவுக்கு அதிகமாகும் போது, அதனால் அந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அப்படியே உடலினுள் தங்கி, அதன் காரணமாக உடல் வெப்பம் அதிகரிக்கும் என்று கூறுகின்றனர்.

பப்பாளியை ஒருவர் தனது அன்றாட உணவில் சிறிது எடுத்து வருவதன் மூலம், அதில் உள்ள பாப்பைன் என்னும் செரிமான நொதி செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை அதிகரித்து, செரிமான பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.

பப்பாளியை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடலில் உள்ள கிருமிகள், குடல் புழுக்கள் அல்லது வேறு வகையான நோய்த்தொற்றுகளில் இருந்து உடலைப் பாதுகாத்து, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

சமீபத்திய ஆய்வில் பப்பாளி புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை எதிர்த்துப் போராடி, உடலை புற்றுநோய் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பப்பாளி கணையம் மற்றும் மார்பக புற்றுநோயின் தாக்கத்தைத் தடுக்கிறதாம்.

பழங்களிலேயே பப்பாளி உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, சரும ஆரோக்கியத்தையும், அழகையும் அதிகரிக்க உதவும் ஓர் சிறந்த பழம். இதனை உட்கொள்வதோடு, சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவி வந்தால், பல சரும பிரச்சனைகளைத் தடுக்கலாம். ஆகவே பப்பாளி உடல் வெப்பத்தை அதிகரிக்கும் என்று நினைத்து, முழுமையாக தவிர்க்காமல், அளவாக உட்கொண்டு, முடிந்த அளவில் அதன் நன்மைகளைப் பெற முயற்சி செய்யுங்கள்.201605090925514516 Increase body heat to eat papaya SECVPF

Related posts

செவ்வாழையை தினமும் ஒன்று உட்கொண்டு வந்தால் என்ன நன்மைகள்…

nathan

கைக் குலுக்குறது கூட குத்தமா…??? கை எடுத்து கும்பிடுங்க அது தான் சரி!!!

nathan

மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்தாகும் ‘கிவி’ பழம்

nathan

உங்களுக்கு தெரியுமா உடல்நலத்திற்குப் பத்துவித பயன்தரும் வாழைப்பழம்!

nathan

சுவையான இந்தியன் ஸ்டைல் பூண்டு நூடுல்ஸ்

nathan

நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த முந்திரிபழம்

nathan

உங்களுக்கு தெரியுமா 2 முதல் 3 கப் காஃபி பெண்களில் உடல் கொழுப்பைக் குறைக்க உதவும்!

nathan

தூதுவளை சூப்

nathan

உடலுக்கு மட்டுமல்ல, நம்முடைய சருமத்திற்கும் ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடியது செவ்வாழைப்பழம் !!

nathan