32.3 C
Chennai
Thursday, Mar 12, 2026
2
சைவம்

கோவைக்காய் அவியல்

தேவையானப்பொருட்கள்:

கோவக்காய் – 10 முதல் 15 வரை
மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன்
தேங்காய் துருவல் – 3 முதல் 4 டேபிள்ஸ்பூன் வரை
சீரகம் – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 அல்லது 3
தயிர் – 1/2 கப்
தேங்காய் எண்ணை – 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

கோவக்காயை கழுவி விட்டு, நீள வாக்கில் 4 அல்லது 5 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, நன்றாக பிசறி வைக்கவும்.

தேங்காய் துருவல், சீரகம், பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு, 1 அல்லது 2 டேபிள்ஸ்பூன் தயிரையும் சேர்த்து, சற்று கொரகொரப்பாக அரைத்துதெடுக்கவும்.

ஒரு வாணலியை அடுப்பிலேற்றி, ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணை விட்டு காய்ந்ததும் அதில் கோவக்காய் துண்டுகளைப் போட்டு, 2 அல்ல்து 3 நிமிடங்கள் வரை வதக்கவும். பின்னர் அதில் ஒரு கை நீரைத் தெளித்துக் கிளறி விட்டு, மூடி வைத்து, மிதமான தீயில் வேக விடவும். காய் முக்கால் பங்கு வெந்தால் போதும், மூடியைத் த்றந்து, காயின் மேல் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைப் போடவும். (இப்பொழுது கிளற வேண்டாம்). அப்படியே மூடி வைத்து மேலும் 2 நிமிடங்கள் வேக விடவும். பின்னர் மூடியைத் திறந்து, கிளறி விட்டு, அதில் மீதமுள்ள தேங்காய் எண்ணையை ஊற்றி, கறிவேப்பிலையயும் சேர்த்துக் கிளறவும் கடைசியில், தயிரை நன்றாகக் கடைந்து, காயில் ஊற்றிக் கிளறி, உடனே இறக்கி வைக்கவும்.2

Related posts

சூப்பரான சுரைக்காய் சப்ஜி

nathan

உங்களுக்காக பூண்டில் செட்டிநாடு ஸ்டைலில் குழம்பு செய்வது எப்படி

nathan

சுவையான பலாக்காய் குழம்பு செய்ய வேண்டுமா!

nathan

ஃபிரைடு ரைஸ்

nathan

சூப்பரான வெந்தய மசாலா சாதம்

nathan

கறிவேப்பிலை குழம்பு

nathan

கலவை காய்கறி மசாலா

nathan

மஷ்ரூம் பிரியாணி

nathan

முருங்கைப்பூ பொரியல் செய்ய…!

nathan