28.8 C
Chennai
Thursday, Aug 13, 2026
ஆரோக்கிய உணவு

சிறுதானிய அடை செய்வது எப்படி

சிறுதானிய உணவுகள் உடலுக்குச் சக்தியையும், நோயற்ற வாழ்வையும் அள்ளித் தருபவை. எளிதில் செரிமானமாகும் சிறுதானியங்களைக் கொண்டு செய்யும் அடை சாப்பிடுவதன் மூலம், உடலில் சத்துக்களைக் கூட்டலாம்.

சிறுதானிய அடை செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

கம்பு – கால் கிலோ
கேழ்வரகு – கால் கிலோ
சோளம் – கால் கிலோ
கொள்ளு – கால் கிலோ
பாசிப் பயறு – கால் கிலோ
குதிரைவாலி – கால் கிலோ
சாமை அரிசி – கால் கிலோ
வரகரிசி – கால் கிலோ
முழு கறுப்பு உளுத்தம்பருப்பு – 4 டீஸ்பூன்
கொண்டைக்கடலை – 4 டீஸ்பூன்
வெங்காயம் – 1
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – 10 பல்
உப்பு – சுவைக்கு
எண்ணெய் – சிறிதளவு
முருங்கை கீரை – 2 கைப்பிடி

செய்முறை :

* வெங்காயம், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசிப் பயறு, குதிரைவாலி, சாமை அரிசி, வரகரிசி, முழு கறுப்பு உளுத்தம்பருப்பு, கொண்டைக்கடலை அனைத்தையும் காலை முதல் மாலை வரை தண்ணீரில் ஊறவைக்கவும். நன்றாக ஊறியதும், தண்ணீரை வடித்து, இரவு, ஒரு வெள்ளைத் துணியில் கட்டிவைக்கவும். காலையில் முளை கட்டி இருக்கும்.

* இதனுடன், நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

* அரைத்த மாவை உப்பு, முருங்கை கீரை போட்டு நன்றாக கரைத்து கொள்ளவும்.

* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு அடையாகத் ஊற்றி, அதன் மேல் சிறிது எண்ணெய் ஊற்றி இருபுறமும் சுட்டு எடுத்தால், சுவையான அடை தயார்.

Related posts

இளநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

வெள்ளைபடுதலைக் குணமாக்கும் எள்ளு உருண்டை!

nathan

உங்க உடல் எடையை சீக்கிரமா குறைக்க தினமும் நீங்க காபியை இப்படி குடிச்சா போதுமாம்…!தெரிந்துகொள்வோமா?

nathan

பழச்சாறுகளை விட பழங்கள் ஏன் சிறந்தது தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

வளரும் இளம் பருவ பெண்கள்: என்னென்ன சாப்பிடலாம்

nathan

நீங்கள் அடிக்கடி மதியம் தயிர் சாதம் சாப்பிடவங்க மொதல்ல இத படிங்க…

nathan

உணவில் அதிகளவு தேங்காய் சேர்ப்பது உடலுக்கு நல்லதா? கெட்டதா?

nathan

நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட பச்சை மிளகாய்

nathan

தக்காளி குழம்பு

nathan