c2485444 3x2 1
Other News

நடிகர் கலாபவன் மணி மரணத்தில் திடீர் திருப்பம்

பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி, தமிழில் ‘ஜெமினி, புதிய கீதை, எந்திரன், பாபநாசம்போன்ற படங்களில் நடித்துள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள சாலக்குடியில் உள்ள தனது பண்ணை வீட்டில் ரத்த வாந்தியுடன் இறந்து கிடந்தார்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரது மரணத்தில் பல கேள்விகள் எழுந்தன. அவர் மது அருந்தியதால் இறந்ததாக அவரது குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பினர். இதனையடுத்து கலாபவன் மணியின் குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கில் அவரது மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர், இரண்டு வருட விசாரணைக்குப் பிறகு, கலாபவன் மணியின் மரணம் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால்தான் நடந்ததாகவும், கொலை இல்லை என்றும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த தகவலை வெளியிட்ட கேரளாவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி உன்னிராஜன், தினமும் 12-13 பாட்டில்கள் பீர் குடித்ததால் கலாபவன் மணியின் மரணம் நிகழ்ந்ததாக தெரிவித்துள்ளார். கல்லீரல் செயலிழந்தாலும், கலாபவன் மணி அளவுக்கு அதிகமாக பீர் குடிக்கும் பழக்கத்தை கைவிடவில்லை என்று கூறப்படுகிறது.

கல்லீரல் செயலிழந்து ரத்த வாந்தி எடுத்தபோதும் அவர் பீர் குடிப்பதை நிறுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது.

மேலும், இறந்த மார்ச் 6, 2016 அன்று மதியம் 12 மணியளவில் பீர் பாட்டிலை குடித்ததாகவும், பிரேத பரிசோதனையில் அதில் மெத்தில் ஆல்கஹால் இருப்பது தெரியவந்ததாகவும் கூறியுள்ளார்.

Related posts

மே மாதத்தில் பல கிரக மாற்றங்களால் 3 ராசிகளின் வாழ்க்கைக்கு அதிஷ்டம்

nathan

வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம்! பல பெண்களுடன் நெருக்கம்! கணவனின் உண்மை முகத்தை அம்பலப்படுத்திய மனைவி

nathan

வீட்டில் சிக்கன் சாப் செய்முறை

nathan

மீண்டும் திருமண வைபோகமா? விஜயகுமாரின் மகள் திருமண புகைப்படம்

nathan

தமிழும் சரஸ்வதியும் சீரியல் கதாநாயகன் தீபக்கின் குடும்ப புகைப்படம்

nathan

6 போட்டியாளர்களை இரண்டாவது வீட்டிற்குள் அனுப்பிய பிக் பாஸ்…

nathan

மனைவியை பிரிய காரணம் என்ன?

nathan

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகா

nathan

GOAT படத்தில் மெயின் வில்லனே இவர் தான்.?

nathan