Other News

சீனாவில் டிக் டாக் பிரபலத்திற்கு நடந்த துயரம்! விவகாரத்தான மனைவியை மீண்டும் திருமணம் செய்ய துடித்த கணவன்!

625.0.560.350.160.300.0ள்ளது.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தைச் சேர்ந்த லாமு கிராமப்புற சூழலியல் குறித்து பல காணொளியை பதிவேற்றி பிரசித்தி பெற்றவராக அறியப்படுகிறார்.

இந்நிலையில், செப்டம்பர் 14 ஆம் திகதி முதல் லைமு தனது நேரலையை தொடங்கியவுடன் அவர் மீதான தாக்குதலும் தொடங்கியுள்ளது.

இந்த தாக்குதலில் லாமுவின் முன்னாள் துணைவர் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த அன்று, கத்தி மற்றும் பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களை கொண்டு லாமுவின் வீட்டினுள் நுழைந்ததாக சொல்லப்படுகின்றது.

ஜின்சுவான் கவுண்டி பொது பாதுகாப்பு பணியகத்தின் அறிக்கையின்படி, தாக்குதலுக்கு உள்ளான லாமு முதற்கட்டமாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயர் சிகிச்சைக்காக சிச்சுவான் மாகாண மக்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

 

மருத்துவ செலவுக்கா லாமுவின் ரசிகர்கள் ஒரு மில்லியனுக்கும் அதிகமான யுவானை 24 மணி நேரத்தில் வழங்கியுள்ளனர். ஆனாலும், செப்டம்பர் 24-ஆம் திகதி அன்று 90 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த லாமு சிகிச்சை பலனின்றி செப்ட்ம்பர் 30-ஆம் திகதி அன்று உயிரிழந்துள்ளார்.

லாமுவின் கணவர் டாங் இந்த தாக்குதலில் ஈடுப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், இதற்கு முன்னதாகவும் இதுபோன்ற தாக்குதலில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார்.

லாமு-டாங் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருவரின் மனமுறிவுக்கு பின்னர் குழந்தைகள் ஆளுக்கு ஒன்றாக பிரித்து கொடுக்கப்பட்டது.

ஆனால், விவாகரத்திற்கு பின்னரும் தன்னை மீண்டும் மணந்துகொள்ளும்படி டாங் வற்புறுத்தியதாக லாமுவின் நெருங்கிய உறவினர் தெரிவித்துள்ளனர். இதற்கு லாமு சம்மதிக்க மறுத்த நிலையில்தான் இந்த தாக்குதல் அரங்கேறியுள்ளது.

சீனாவில் நடைபெற்றுள்ள இந்த சம்பவமானது அந்நாட்டு மக்களிடையே பெரும் சீற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டு சமூக ஊடகமான வெய்போவில் லாமுவின் மரணம் குறித்து 70 மில்லியன் ஹாஷ் டேக்குகள் பதிவிடப்பட்டுள்ளன. தற்போது டாங் காவல்துறையின் பிடியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button