1 1
ஆரோக்கிய உணவு

அடிக்கடி கறிவேப்பிலை துவையல் செய்து, சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு வந்தால்

நாம் அன்றாடம் காய்கறி கடைகளில் நமக்குத் தேவையான காய்களை வாங்கிவிட்டு, பின் கொசுறாக கொஞ்சம் கறிவேப்பிலை கேட்போம். இந்த கறிவேப்பிலை இலவசமாக கிடைப்ப‍தால்

நமக்கு அதன் மருத்துவ பண்பு தெரிவதில்லை. இந்த கறிவேப்பிலையை சும்மா சமையலின் சுவைக்காகவும் மணத்து க்காகவும் போட்டுவிட்டு, பின் சாப்பிடும் போது அதை தூக்கியெறிந்து விடுவோம். ஆனால் இந்த கறிவேப்பிலையில் தான் எத்த‍னை எத்த‍ னை சத்துக்கள் காணப்படுகின்றன• இதனை சாப்பிடுவதால், எத்த‍னை எத்த‍னை நோய்க ளை குணமாக்குகின்றன என்பதை அறிந்திருக் க‍ வாய்ப்பில்லை. இதோ அதன் மருத்துவ பண்புகளை பார்ப்போமா?

இந்த கறிவேப்பிலையை துவையாக செய்து, அதை வெறுஞ்சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு ஜீரண சக்தியை அதிகரிக்கும். வயிற்றுப் போக்கை குணப் படுத்தும். சர்க்கரைநோயையும் கட்டுப்படுத்துகிறது . மேலும் கறிவேப்பிலை சேர்த்துக் கொள்வதால் இன்சுலின் தேவை குறையும். உணவாக உட்கொள் ளும் மாவுப் பொருள்களை குளுகோசாக மாற்றி உடலுக்குத் தரும். சுண்ணாம்புச்சத்து இதில் அதிகம் இருக்கிறது.

இதை கறிவேப்பிலை துவையலாக மட்டுமே செய்து சாப்பிட வேண்டுமென்பதில்லை. பிற உணவு சமைக்கும் போது அதனுடன் இந்த கறிவேப்பிலை சேர்த்து சமைத்தால், அதை சாப்பிடும்போது, தூக்கி எறிந்து விடாமல் அதையும் நாம் மென்று சாப்பிட வேண்டும்.
1 1

Related posts

மாம்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு பலன்களா..?!!

nathan

உங்களுக்கு இந்த அறிகுறிகள் எல்லாம் தெரிந்தால் இஞ்சியை மறந்தும் சாப்பிட்டு விடாதீர்கள்!

nathan

தெரிஞ்சிக்கங்க…வாரத்துக்கு ஒருநாள் இந்த மீனை சாப்பிடுங்க.. உங்களுக்கு எந்த நோயும் எட்டிப் பார்க்காது..!

nathan

மருத்துவ பயன்கள் நிறைந்த அரைக்கீரை!!

nathan

ஆப்பிளை எப்போது சாப்பிட வேண்டும்?

nathan

இட்லி மற்றும் தோசைக்கு பொருத்தமாக இருக்கும் சட்னிக்கள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா ரத்தச் சர்க்கரை நோயை விரட்டி அடிக்கும் கருப்பு களி….

nathan

வெந்தயம்… கசப்பு தரும் இனிமை!

nathan

உங்களுக்கு தெரியுமா உடல் எடையை படிப்படியாக குறைக்கும் உணவுகள்!

nathan