27.1 C
Chennai
Saturday, May 24, 2025
Sneha
Other News

செம ஹிட் நடிகை இவர்: சிறுவயது புகைப்படம்

தமிழ் சினிமாவில் புன்னகையின் அரசி என்று அழைக்கப்படும் நடிகை சினேகாவின் சிறுவயது புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

2000 ஆம் ஆண்டு இங்கனே ஒரு நிலாபக்ஷி என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் சினேகா. பின்னர் மாதவனுக்கு ஜோடியாக என்னவளே என்ற தமிழ் படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு ஆஆனந்தம், பார்த்தாலே பரவசம், பம்மல் கே சம்மந்தம், புன்னகை தேசம், உன்னை நினைத்து, ஏப்ரல் மாதத்தில், வசீகரா, ஜனா, வசூல்ராஜா என பல வெற்றிப் படங்களில் நடித்தார்.

தனுஷுடன் இணைந்து நடித்த “புதுப்பேட்டை” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று இன்றும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதேபோல் கமல், விஜய், அஜித் சூர்யா என முன்னணி நடிகர்களுடன் பல வெற்றிப் படங்களில் பணியாற்றியவர் சினேகா. சேரனின் ஆட்டோகிராப் படத்தில் சினேகாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.Sneha 5

சேரனுடன் பிரிபோங் சந்திப்போம் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் விருதையும் பெற்றார். இவர் கடைசியாக தமிழில் தனுஷுடன் பட்டாஸ் படத்தில் நடித்தார். அதன்பிறகு மம்முட்டியுடன் இணைந்து சமீபத்தில் வெளியான மலையாளப் படமான ‘கிறிஸ்டோபர்’ படத்தில் தோன்றினார்.

நடிகர் பிரசன்னாவை 2012ல் திருமணம் செய்து கொண்ட சினேகாவுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது தென்னிந்திய மொழிப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நடிகை சினேகாவின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சினேகா, தன்னையும் தன் குடும்பத்தையும் பற்றிய படங்களை தொடர்ந்து பதிவிடுகிறார். அது போலவே,இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஹாட் டாபிக் ஆகி இணையத்தில் வைரலாகி வருகிறது. Sneha

Related posts

நாக சைதன்யா மீதுள்ள காதலால் அந்த இடத்தில் ஆசை ஆசையாய் குத்திய டாட்டூவை அழித்த சமந்தா

nathan

மெட்ராஸ் மாகாணம் ‘தமிழ்நாடு’ என பெயர் மாறிய வரலாறு

nathan

கேப்டன் கேப்டன் என பயங்கரமாக கத்திய பிரபு

nathan

இரண்டு நாட்களில் குஷி படம் செய்துள்ள வசூல்..

nathan

பிறந்தநாளை கொண்டாடிய பிக் பாஸ் ஆயிஷா

nathan

மகளுக்காக மைதானத்தில் விராட் கோலி செய்த தரமான சம்பவம்….

nathan

விஜய்க்காக சீறிப் பாய்ந்த சீமான் – ‘வாரிசு’ படத்திற்கு சிக்கல்

nathan

முதல் முயற்சியிலே குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற டீக்கடைக்காரர் மகள்!

nathan

கோவையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை…

nathan