32.7 C
Chennai
Friday, Jul 10, 2026
Other News

செம ஹிட் நடிகை இவர்: சிறுவயது புகைப்படம்

தமிழ் சினிமாவில் புன்னகையின் அரசி என்று அழைக்கப்படும் நடிகை சினேகாவின் சிறுவயது புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

2000 ஆம் ஆண்டு இங்கனே ஒரு நிலாபக்ஷி என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் சினேகா. பின்னர் மாதவனுக்கு ஜோடியாக என்னவளே என்ற தமிழ் படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு ஆஆனந்தம், பார்த்தாலே பரவசம், பம்மல் கே சம்மந்தம், புன்னகை தேசம், உன்னை நினைத்து, ஏப்ரல் மாதத்தில், வசீகரா, ஜனா, வசூல்ராஜா என பல வெற்றிப் படங்களில் நடித்தார்.

தனுஷுடன் இணைந்து நடித்த “புதுப்பேட்டை” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று இன்றும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதேபோல் கமல், விஜய், அஜித் சூர்யா என முன்னணி நடிகர்களுடன் பல வெற்றிப் படங்களில் பணியாற்றியவர் சினேகா. சேரனின் ஆட்டோகிராப் படத்தில் சினேகாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

சேரனுடன் பிரிபோங் சந்திப்போம் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் விருதையும் பெற்றார். இவர் கடைசியாக தமிழில் தனுஷுடன் பட்டாஸ் படத்தில் நடித்தார். அதன்பிறகு மம்முட்டியுடன் இணைந்து சமீபத்தில் வெளியான மலையாளப் படமான ‘கிறிஸ்டோபர்’ படத்தில் தோன்றினார்.

நடிகர் பிரசன்னாவை 2012ல் திருமணம் செய்து கொண்ட சினேகாவுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது தென்னிந்திய மொழிப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நடிகை சினேகாவின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சினேகா, தன்னையும் தன் குடும்பத்தையும் பற்றிய படங்களை தொடர்ந்து பதிவிடுகிறார். அது போலவே,இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஹாட் டாபிக் ஆகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts

பிக்பாஸ் 7 போட்டியாளர் திடீரென மருத்துவமனையில் அனுமதி

nathan

‘சாக்கடைக்குள் காலை வச்சிட்டேன்’ சுந்தரா ட்ராவல்ஸ் ராதா

nathan

வேங்கைவயல் சம்பவத்தில் நடந்தது என்ன?

nathan

வீடியோவில் வந்த வனிதாவின் மகள்… கண்கலங்கிய ஜோவிகா

nathan

பிக்பாஸ் 7 ஜோவிகா விஜயகுமார் கலக்கல் புகைப்படங்கள்

nathan

மகன் தனுஷின் 25வது பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய நடிகர் நெப்போலியன்

nathan

இந்த மாதிரி முகம் இருக்கறவங்க காதல் வாழ்க்கை சூப்பரா இருக்குமாம்..

nathan

அப்பா ஆன சந்தோஷத்தில் நாஞ்சில் விஜயன் பகிர்ந்த தகவல்

nathan

தாயின் வாழ்நாள் ஆசையை நிறைவேற்ற மகன்கள் -தாயை தோளில் சுமந்து சென்ற மகன்கள்!

nathan