31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
சமையல் குறிப்புகள்

தக்காளி பியூரியை வீட்டிலேயே தயாரிக்க முடியுமா?

கடைகளில் கிடைக்கிற தக்காளி பியூரியையும் மேயனைஸையும் வீட்டிலேயே தயாரிக்க முடியுமா?

சமையல்கலை நிபுணர் சந்திரலேகா ராமமூர்த்தி

ஒரு கிலோ தக்காளியை நன்கு கழுவி, மேல் பக்கம் லேசாக கீறி, கொதிக்கும் தண்ணீரில் 15 நிமிடங்கள் போட்டு எடுக்கவும். பிறகு அவற்றைக் குளிர்ந்த தண்ணீரில் போட்டு, தோலை நீக்கி, அரைத்து வடிகட்டவும். அத்துடன் அரை கப் வினிகர், அரை கப் சர்க்கரை, 1 டேபிள்ஸ்பூன் உப்பு சேர்த்து 20 முதல் 45 நிமிடங்களுக்குக் கொதிக்க விட்டு, ஆற வைத்து எடுத்து வைத்துக் கொண்டால் சுத்தமான, ரசாயனக் கலப்பில்லாத தக்காளி பியூரி தயார்.

மேயனைஸ் செய்ய…

கிரீம் சீஸ் – 2 டேபிள்ஸ்பூன், தயிர் – 2 டேபிள்ஸ்பூன், கன்டென்ஸ்டு மில்க் – 1 டேபிள்ஸ்பூன், ஆலிவ் ஆயில் – 3 டேபிள்ஸ்பூன். இவை எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து கிரீம் பதத்துக்கு மெதுவாக அடிக்கவும். இத்துடன் வாசனைக்காக பூண்டு விழுது அல்லது கடுகு விழுது சேர்த்துக் கொள்ளலாம். இந்த மேயனைஸை பிரெட், சப்பாத்தி போன்றவற்றுக்கு ஸ்பிரெடாகவோ, தொட்டு சாப்பிடும் டிப்பாகவோ பயன்படுத்தலாம். 3 நாட்களுக்கு மேல் வைத்திருந்து உபயோகிக்க வேண்டாம்.

Related posts

சூப்பரான பன்னீர் வெஜிடேபிள் குருமா

nathan

லெமன் பெப்பர் சிக்கன்

nathan

சுவையான ப்ராக்கோலி சப்ஜி

nathan

சுவையான சேப்பங்கிழங்கு டிக்கி வீட்டிலேயே செய்யலாம்…..

sangika

சூப்பரான சேனைக்கிழங்கு பொரியல்

nathan

முட்டை சப்பாத்தி ரோல்

nathan

சுவையான தினை குழிப்பணியாரம்

nathan

சுவையான கொள்ளு உருண்டைக் குழம்பு

nathan

சுவையான வெஜிடேபிள் கிச்சடி ரெசிபி

nathan