29.7 C
Chennai
Friday, Jul 17, 2026
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

அழகுக் குறிப்புகள்

ld354இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன் பயிற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும்.

ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.

முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.

மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும்.

பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.

ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.

Related posts

உங்களுக்கு சிவந்த சருமம் பெற வேண்டுமா? அப்ப இத படிங்க!

nathan

சரும அழகை அதிகரிக்கும் வேப்பிலை

nathan

கொளுத்தும் வெயிலிலும் நீங்கள் ஜொலிக்க…

nathan

உரோமங்களை அகற்ற ஈஸி வழி

nathan

உங்களுக்கு தெரியுமா சருமம் பளபளப்பாக பழம், காய்கறி சாப்பிடுங்க!: மருத்துவர் கூறும் தகவல்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா உச்சி முதல் பாதம் வரை அழகாக்க இந்த ஒரே பூ போதும்!

nathan

சூப்பர் சிங்கர் பிரகதி அம்மாவுடன் வெளியிட்ட வீடியோ, 23 வயதில் ஸ்லீப்பிங் ரூம் புகைப்படம்!

nathan

எந்த உணவுடன் எதனை சேர்த்து சாப்பிடக்கூடாது

nathan

உங்களுக்கு சுருக்கமில்லாத சருமத்திற்கு தினமும் நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்!!

nathan