36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
சரும பராமரிப்பு

சரும நிறத்தை அதிகரிக்கும் புளி

புளி வெறும் சுவைக்கு மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் பயன்படுகிறது. புளியை கொண்டு சருமத்தை எப்படி பராமரிப்பது என்று பார்க்கலாம்.

சரும நிறத்தை அதிகரிக்கும் புளி பேஸ் பேக்
புளி வெறும் சுவைக்கு மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தைப்பாதுகாக்கவும் பயன்படுகிறது. அத்தகைய புளி சருமம் மற்றும் முடிக்கும் மிகவும் நல்லது. புளி சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.

இதற்கு புளியில் உள்ள வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கனிமச்சத்துக்கள் தான் காரணம். புளியைக்கொண்டு எப்படி சருமம் மற்றும் தலைமுடியினைப் பராமரிப்பது பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

புளி சருமத்தின் பொலிவை அதிகரிக்கவும் உதவும். அதற்கு புளியை சுடுநீரில் ஊற வைத்து சாறு எடுத்து, அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால், சருமத்தின் பொலிவு அதிகரிக்கும். மேலும் தொடையில் உள்ள செல்லுலைட்டை நீக்க சிறிது புளிச்சாற்றில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து, அதில் சிறிது பேக்கிங் சோடா தூவி, பிரஷ் பயன்படுத்தி மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் செல்லுலைட் மறையும்.

புளியில் ஆல்பா-ஹைட்ராக்ஸில்-ஆசிட் உள்ளது. இது சருமத்துளைகளில் தங்கியுள்ள அழுக்குகளையெல்லாம் நீக்கும். எனவே புளிச்சாற்றில் 1 டீஸ்பூன் தயிர் மற்றும் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, 2 நிமிடம் கழித்து கழுவினால், முகத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக நீக்கி, முகம் பளிச்சென்று வெள்ளையாக இருக்கும்.

புளிச்சாற்றில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால், முகச்சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.

பலருக்கும் கழுத்தைச்சுற்றி கருமையான படலம் ஒன்று இருக்கும். இதனை நீக்க புளிச்சாற்றில் தேன் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து, கருமையாக உள்ள இடத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் 3-4 முறை செய்து வந்தால், கருமையை விரைவில் போக்கலாம்.

புளியில் வைட்டமின்கள், நார்ச்சத்து, அமிலங்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை உள்ளது. இவை சருமத்திற்கு ஊட்டம் அளித்து, முதுமைத்தோற்றம் வருவதைத்தடுக்கும்.

அதற்கு புளிச்சாற்றில் தேன் மற்றும் கடலை மாவு சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட வேண்டும்.

Related posts

பெண்களே உங்களுக்கு சிக்குன்னு அழகான தொடை வேண்டுமா? அப்ப இந்த வழிகள ட்ரை பண்ணுங்க…!

nathan

இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றினால், நீங்களும் ஒரு அழகி தான்!

sangika

உங்கள் சருமப் பிரச்சனைகளை விடுபடச் செய்யும் இந்த அழகுக் குறிப்பை பற்றி தெரியுமா?

nathan

உங்களுக்கு வெள்ளையாக ஆசையா?

nathan

சரும பிரச்சனைகளை தீர்த்து பளபளப்பாக்கும் கஸ்தூரி மஞ்சள்

nathan

அழகாக இருக்க எளிய வழி,

nathan

உங்களுக்கு இருப்பது எந்த வகையான சருமம் என்று தெரியுமா…?

nathan

சருமத்திற்கு இளமையூட்டும் கடலை மாவு

nathan

இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றினால், நீங்களும் ஒரு அழகி தான்!

sangika