22.8 C
Chennai
Wednesday, Jan 28, 2026
1 sorakkai kurma1 1669470091
சமையல் குறிப்புகள்

சுரைக்காய் குருமா!

தேவையான பொருட்கள்:

* சுரைக்காய் – 250 கிராம்

* சீரகம் – 1/2 டீஸ்பூன்

* வெங்காயம் – 1 (நறுக்கியது)

* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2 டீஸ்பூன்

* தக்காளி – 1 (நறுக்கியது)

* பச்சை மிளகாய் – 2

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 1 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* எண்ணெய் – 2 டீஸ்பூன்

* கொத்தமல்லி – சிறிது

அரைப்பதற்கு…

* துருவிய தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன்

* கசகசா – 1 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் சுரைக்காயை கழுவி, அதன் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தைப் போட்டு தாளிக்க வேண்டும்.

* பின்பு வெங்காயத்தைப் போட்டு சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.

Sorakkai Kurma Recipe In Tamil
* பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் நறுக்கிய சுரைக்காய், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* பின்பு அதில் 1 கப் நீரை ஊற்றி கிளறி 7-10 நிமிடம் சுரைக்காய் வேகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

* சுரைக்காய் வெந்து கொண்டும் அதே சமயத்தில் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய் மற்றும் கசகசாவை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். வேண்டுமானால் அரைக்கும் போது, 4-5 முந்திரியை சேர்த்துக் கொள்ளலாம். இதனால் சுவை இன்னும் அற்புதமாக இருக்கும்.

* சுரைக்காய் வெந்ததும், அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து, குறைவான தீயில் வைத்து, 2-3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான சுரைக்காய் குருமா தயார்.

Related posts

சமையல் மட்டும் முக்கியம் இல்லை இவற்றையும் கருத்தில் எடுங்கள்!

sangika

ரேஷன் அரிசியில் மொறு மொறுப்பான தோசை

nathan

அரைக்கீரை கடைசல்

nathan

வாழைப்பழ ரொட்டி

nathan

செட்டிநாடு இட்லி பொடி

nathan

சுவையான பனீர் டிக்கா! தயார் செய்வது எப்படி?

nathan

சுவையான சீஸ் ஆலு பன்ச் ரெடி..

sangika

ஆரோக்கியம் என்ற பெயரில் நாம் தினமும் செய்யும் தவறுகள்

nathan

பசலைக்கீரை சாம்பார்

nathan